செய்திக்கூடை

ஏப்ரல் 16-30
  • போபால் விஷவாயு வழக்கில் அமெரிக்காவில் உள்ள யூனியன் கார்பைடு நிறுவனத் தலைவர் ஆண்டர்சனை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள சி.பி. அய்க்கு டெல்லி நீதிமன்றம் அனுமதி கொடுத்துள்ளது.
  • அமெரிக்காவின் டெக்சாஸ் இருதய நோய் மருத்துவ நிறுவன
    மருத்துவர்கள் செயற்கை இருதயம் பொருத்திச் சாதனை படைத்துள்ளனர்.
  • போராட்டம் என்ற பெயரில் பொதுச் சொத்துகளை அழிக்கும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.
  • பாகிஸ்தானில் 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இந்தியரின் தண்டனைக் காலத்தைக் குறைத்து விடுவிக்க அந்நாட்டு அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி ஒப்புதல் அளித்துள்ளார்.
  • சூரிய ஒளியையும் தண்ணீரையும் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் செயற்கை இலையினை அமெரிக்காவின் மாசாசூட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
  • பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பைனாப்பிள், வாழைப்பழம் ஆகியவற்றின் நார்களைக் கொண்டு கார் வடிவமைத்துள்ளனர்.
  • அமெரிக்கா அருகிலுள்ள மேற்கிந்தியத் தீவுகளில் ஒன்றான டிரினிடாட் டோபாகோ நாட்டின் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா பிரசாத் பிஸ்செஸ்சார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • உடல் அசைவு மூலம் செல்பேசி, அய்பாட் போன்ற சாதனங்களுக்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சிப்பை அமெரிக்காவின் ஜார்ஜியா இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • விமான எரிபொருளுடன் 30 சதவிகித காட்டு ஆமணக்கு எண்ணெயைக் கலந்து மெக்சிகோ சிட்டி விமான நிலையத்திலிருந்து ஏஞ்சல் அல்பினோ கார்சோ நகரம்வரை விமானத்தை இயக்கியுள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *