செவ்வாய் மனிதர்கள்… – செந்துறை மதியழகன்

ஆண்டு 2050 செவ்வாய் மண்டலம், மரினர் பள்ளத்தாக்கின் விளிம்பு முகாம். “அந்தப் ப்ளாட் 145இல் தண்ணீர்ப்பாசனம் சரிவர இல்லையாம், நெற்பயிர் வாடிவிட்டதாக அதிகாலையே குறுந்தகவல் புகார்” என்ற துணை அதிகாரி அகிலனைக் கோபமாக ஏறிட்டான் நித்திலன். “யாருப்பா புகார் சொன்னது, அந்த… இந்திய அமைச்சர் தானே? இந்தியாவில் இருக்கும் வாடிக்கையாளர்களில் இந்த அமைச்சரிடம் இருந்துதான் நிறைய புகார் வருகிறது. வாடிக்கையாளர்க்கு நம்மால் முடிந்த அளவு சேவையைத் தருகிறோம். மற்றவர் நம் தொழில் நேர்மையைச் சந்தேகிப்பதை எக்காரணம் கொண்டும் […]

மேலும்....

சுடுமூஞ்சி

– அறிஞர் அண்ணா சனியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே! – கணக்கப்பிள்ளை “சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது. அந்த உருத்திராட்சப் பூனை வருகிற நேரமாகுது.” – மாலை விற்பவன் “ஒருநாள் கூடத் தவறமாட்டார். பெரிய பக்திமானல்லவோ அவர் மணி இன்னும் ஆறு ஆகவில்லையே, வந்துவிடுவார்.” – குருக்கள் “நாளைக்குப் பார்த்துக்கொள்வோம் தாளம் சரியாக வருகிறதான்னு, மணி ஆறு ஆகப்போகுது. அந்தக் கிழக்குரங்கு வருகிற நேரமாகுது.” – வேதம் “மணி ஆறா? […]

மேலும்....

பொங்கல் வாழ்த்து

ஆறு. கலைச்செல்வன் “இனியா, அடுத்து வாரம் உனக்கு தேர்வுகள் தொடங்கவுள்ளது. ரொம்ப நேரமா நீ செல்பேசியையே தடவிக்கொண்டு இருக்கியே! அப்புறம் எப்படி தேர்வுகளை நல்லமுறையில் எழுத முடியும்?” தனது பெயர்த்தி இனியாவை அன்புடன் கடிந்து கொண்டார் தாத்தா முத்துராஜா. “தாத்தா, இன்னும் த்ரீ டேய்ஸ்சில் எனக்கு பர்த்டே வரப்போவுது இல்லையா! அதை என்னோட ஃபிரண்ட்ஸ்களுக்கு மெசேஜ் பண்ணிகிட்டு இருக்கேன். அதோடு நம்ம ரிலேஷன்ஸ் எல்லோரும் வரவேண்டும்னு லைக் பண்றேன்,” என்று தாத்தாவுக்குப் பதில் சொன்னாள் இனியா. “மிக்க […]

மேலும்....

அறிவாயுதம்

– ஆறு. கலைச்செல்வன்  அந்த நகரத்தில் முதன்முதலாகக் கட்டப்பட்ட திருமண மண்டபம் என்பது இலட்சுமி திருமண மண்டபம்தான். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்தத் திருமண மண்டபத்தில் அக்கால கட்டத்தில் நிறைய திருமணங்கள் நடைபெற்றன. திருமணம் நடப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே முன்பணம் கட்டி, பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மண்டபம் கிடைக்கும். இந்தத் திருமண மண்டபம் கட்டுவதற்கு முன்பாக சுற்றுப்புற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீடுகளிலேயே பந்தல் போட்டு திருமணங்களை நடத்திக் கொண்டிருந்தனர். இது […]

மேலும்....

பதிவு செய்யப்படாதவள்

… டி.கே. சீனிவாசன் … ‘அதோ, அந்த ஜன்னலைப் பாருங்கள்! கம்பிகளுக்கிடையே காணப்படும் அவள் முகம் கவலை நிறைந்திருப்பானேன்? அவள் வாழ்வில் ஒளி மறைந்துவிட்டதே; அவளைப் பார்த்துக்கொண்டே போகும் பலரில் எவராவது அவள் வாழ்வில் படிந்த தூசியைத் துணிந்து தட்டிவிட எண்ணினீர்களா?” இதைத்தான் அவன் அந்த வீட்டுப்பக்கம் போகும் போதும் வரும்போதும் உலகத்தைப் பார்த்துக் கேட்க நினைத்தான். வாயைத் திறந்து கேட்கவில்லை. அவளைப் பரிவாகப் பார்ப்பதும் உலகை ஆத்திரமாக நோக்குவதும் அவன் எண்ணத்தை வெளிப்படுத்தின. அவள் யார் […]

மேலும்....