அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (321)

சத்தியராஜுக்கு நாத்திக நன்னெறிச் செம்மல் விருது! – கி. வீரமணி திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் சென்னை பெரியார் திடலில், திராவிடர் கழகத் தலைமை நிலைய அலுவலகத்தில் மானமிகு துரை. சக்ரவர்த்தி நிலையத்தில் எமது தலைமையில் 3.1.2004 சனி முற்பகல் 11:00 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது. தொடக்கத்தில் திராவிடர் கழகத் தலைமை நிலையத்தில் மறைந்த திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் துரை. சக்ரவர்த்தி அவர்களின் உருவப் படத்தைத் திறந்து வைத்தோம். சத்யராஜுக்கு ‘நாத்திக நன்னெறிச் செம்மல்’ விருது […]

மேலும்....

தகைசால் தமிழர் ஆசிரியர்! – முனைவர் கடவூர் மணிமாறன்

மிகையே இல்லை மேன்மைப் புகழ்மிகு தகைசால் தமிழர்! தறுகண் மறவர்; தந்தை பெரியார் தலைமை ஏற்ற சிந்தனை யாளர்; அகவை பத்தில் ஒலிவாங் கியின்முன் உரைகள் ஆற்றிய வலிமை மிக்கவர்; எண்ப தாண்டுகள் ஓய்வே இன்றி உணர்ச்சிப் பெருக்குடன் தாய்மொழி, தமிழர், தமிழ்நா டுயர்ந்திட உழைக்கும் திறத்தினர்; உயரிய நுண்மாண் நுழைபுலம் யாவும் எய்திய ஏந்தல்! விடுதலை உண்மை பெரியார் பிஞ்சு மிடுக்குற திராவிடப் பொழிலை நடத்தும் இதழியல் வல்லார்! எவர்க்கும் நல்லார்! உதவும் பண்பினர்; உண்மை, […]

மேலும்....

பிராமணப் பெருமை பேசி புத்தரை நேருக்கு நேர் இழிவு செய்த பார்ப்பனர்கள் – தஞ்சை பெ. மருதவாணன்

புத்தர் 45 ஆண்டுகள் ஏறத்தாழ  வட இந்தியா முழுவதும் கால்நடையாகவே சென்று தனது பரப்புரைப் பயணத் தினை மேற்கொண்டார்.   மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதோடு அவர்களின் அய்யங்களைத் தீர்த்தபடியே இடம் விட்டு இடம் ஊர் விட்டு ஊர் என்று அவர் சென்றுகொண்டே இருந்தார். தங்கக்கூட இடமின்றி பெரும்பாலான சமயங்களில் அவர் சாலை ஓர மரங்களின் நிழலில் தங்கினார். ஒரு துறவியாய் அவர் மூன்று துவராடைகள் மட்டுமே வைத்திருந்தார்.  ஒரு நாளைக்கு ஒருவேளை மட்டுமே உணவு உட்கொண்டு வாழ்ந்தார்.  ஒவ்வொரு […]

மேலும்....

தோழர்கள் தொடங்கிய பெரியாரின் அணுகுமுறை! – வி.சி.வில்வம்

ஒரே கொள்கையில் இருப்பார்கள், சுமூகமான நட்பு இருக்காது. மாறுபட்ட கொள்கையில் இருப்பார்கள், நல்ல நட்பு இருக்கும்! இங்கு பிரச்சினை கொள்கையல்ல; அணுகுமுறை தான்! சிலர் தீவிரமாகக் கொள்கையைப் பேசி, கடுமையாக விவாதம் செய்து, அதை வாக்குவாதமாக மாற்றி கொள்கையில் வெற்றி பெற்றுவிடுவார்கள்; ஆனால் நண்பர்களை இழந்துவிடுவார்கள்! வேறு சிலரோ கொள்கையிலும் வென்று, நண்பர்களையும் தக்க வைத்துக் கொள்வார்கள்! காரணம் சிறப்பான அணுகுமுறை! பெரியாரை நுணுக்கமாக அணுகினால் அவர் பல முனைவர் பட்டங்களையும், மனித குலத்தின் மொத்த மனோதத்துவங்களையும் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

தமிழ்நாடு அரசின் காதுகளுக்கு… 1. கே: காவல்துறையிலும், நிர்வாகத்துறையிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் அ,.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அதிகம் நுழைந்திருப்பதால், அவர்களை அடையாளங்கண்டு கண்காணிக்க வேண்டியது கட்டாயமல்லவா? – சாந்தி, பொதட்டூர். ப:  தமிழ்நாடு திராவிட மாடல் அரசும் முதல் அமைச்சரும் இதனைக் கூர்ந்து கவனித்து, உடனடியாக தக்க பரிகாரம் தேடிட முனைப்புடன் உள்ளனர்  என்பது ஆறுதலான செய்தியாகும். 2. கே: பா.ஜ.க.வின் ஊழல், அராஜகம், வன்புணர்வுகள் இவற்றை பட்டியல் இட்டு துண்டறிக்கைகளாக இந்தியா முழுக்க அனைத்து மொழிகளிலும் மக்களுக்கு […]

மேலும்....