அய்யாவின் அடிச்சுவட்டில்… இயக்க வரலாறான தன் வரலாறு (284)

முத்தமிழ் மன்றத்தின் மூன்று நாள் நிகழ்வுகள் கி.வீரமணி பழனியில் பேராசிரியர் ப.காளிமுத்து _ கா.பிரீதி ஆகியோரின் செல்வி கா.தென்றலுக்கும், தாராபுரம் வட்டம் சிக்கணாபுரம் நா.இராமசாமி _ இரா.தனலட்சுமி ஆகியோரின் செல்வன் இரா.இராசேந்திரனுக்கும் வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழா 5.12.1997 அன்று செல்வமகால் திருமண அரங்கில் தலைமையேற்று நடத்திவைத்தேன். மணவிழாவிற்கு வந்திருந்த அனைவரையும்  வழக்குரைஞர் அ.அருள்மொழி வரவேற்றுப் பேசினார். மணமக்களை வாழ்க்கைத் துணைநல ஒப்பந்த உறுதிமொழி-யினைக் கூறச் செய்தும், மாலை மாற்றிக் கொள்ளச் செய்தும் நடத்தி வைத்து. […]

மேலும்....

தகவல்கள்

லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் இந்தியாவில் ஓட்டல்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு பெட்ரோல் விற்பனை நிலையங்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொதுமக்களின் உபயோகத்திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ஒன்றிய அமைச்சகத்தின் விதியாகும். நாம், அந்த விற்பனை நிலையங்களில் ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற்றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் கழிவறை பராமரிப்புச் செலவுக்காக 4 பைசாவும் நம் கையிலிருந்து கொடுக்கிறோம். அதனால் அடுத்த முறை அவசரம் எனில், […]

மேலும்....

பொருளாதாரம் : கிரிப்டோ கரன்சி எச்சரிக்கை!

முனைவர் வா.நேரு கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் நாணயம். டிஜிட்டல் என்றால் நம்மால் ரூபாய் நோட்டைப்போல, 5 ரூபாய் நாணயம் போல கையால் எண்ணிப் பார்க்க, தொட்டுப் பார்க்க இயலாது. 2008இ-ல் சதோசி நகடோமா, தான் உருவாக்கிய டிஜிட்டல் நாணயத்திற்கு பிட்காயின் (Bitcoin) என்று  பெயரிடுகிறார். அவரே தயார் செய்து வெளியிடுகிறார். அப்போது ஒரு பிட்காயின் மதிப்பு 1 சென்ட். 2009இ-ல் ஒரு பிட்காயின் மதிப்பு 27 டாலர்கள். இன்று (22.12.2021) ஒரு பிட்காயின் மதிப்பு 46,859 டாலர். […]

மேலும்....

நூல் மதிப்புரை

நூல்: ‘சொல்லாய்வுகள்’ ஆசிரியர்: குடந்தய் வய்.மு.கும்பலிங்கன் பதிப்பகம்: மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 108 தொலைபேசி: 2595428 ‘கொள்கை வேள்’ குடந்தை வை.மு.கும்பலிங்கன் அவர்கள் எழுத்தாளர் _ கவிஞர் உலகிற்கு நன்கு அறிமுகமானவர். குறிப்பாக ‘விடுதலை’ நாளிதழில் பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். அவற்றில் மொழிகுறித்த ஆய்வுகளை மிகச் சிறப்பாகத் தொகுத்து அளித்துள்ளார். அந்த வகையில் இவர்தம் ‘சொல்லாய்வுகள்’ எனும் நூல் தற்போது குறிப்பிடத்தக்கவாறு அமையப் பெற்றமை பாராட்டுக்குரியது. ஆய்வறிஞர்கள் பற்பலர் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : மத அடிப்படை கூடாது!

கே1:     இந்துவுக்கும், இந்துத்துவாவிற்கும் உள்ள வேறுபாடு குறித்து இராகுல்காந்தி கூறியது பற்றி தங்கள் கருத்து என்ன?                – அ.மணிகண்டன், திருவண்ணாமலை ப1:        இந்து மதத்தவரின் வாக்கு வங்கியைக் குறிவைத்து பா.ஜ.க. விரிக்கும் அந்த வலையில் வீழக்கூடாது என்றும், நெறி வேறு; (மத) வெறி வேறு என்றும் _ பிரித்துக் கூறுகிறார்  ராகுல் தன் பேச்சில். அங்குள்ள வடபுல அரசியல் சூழலில் இது தேவையான விளக்கமே!                பிள்ளையார் சதுர்த்தி என்ற மூடநம்பிக்கை விழாவின்போது, ஒரு 5 […]

மேலும்....