தகவல்கள்

இந்தியப் பெண்ணால் மாறிய அயர்லாந்தின் கருக்கலைப்புச் சட்டம்! அயர்லாந்தில், கருக்கலைப்புக்கு அனுமதிக்காததால் ஓர் இந்தியப் பெண் உயிரிழந்த சம்பவம், அந்நாட்டின் பல்லாண்டு கால சட்டத்தையே மாற்றி அமைத்தது. கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த பல் மருத்துவரான சவிதாவும் பொறியாளரான அவரின் கணவரும் அயர்லாந்தில் பணியாற்றி வந்தனர். சவிதா 17 வார கர்ப்பிணியாக இருந்த நிலையில் கருச்சிதைவு ஏற்படவே, கருவைக் கலைக்க மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டனர் அந்தத் தம்பதி. அந்நாட்டுச் சட்டப்படி கருவிலுள்ள குழந்தைக்கு இதயத்துடிப்பு இருக்கும் பட்சத்தில் கருக்கலைப்பு […]

மேலும்....

பகுத்தறிவு : போதை தெளிந்தது

ஆதிலெமு, திருப்பாலை “என்னம்மா, திடீர்ன்னு குண்டத் தூக்கிப் போடுறே… இது எனக்கு பத்தாவது வருடப் பயணம்… இப்ப நான் போயிட்டு வந்துட்டா அடுத்த தடவை குருசாமி ஆயிடுவேன்… நம்ப வீட்டிலே தொட்டில் கட்ற பாக்கியம் அவன் புண்ணியத்திலே கைகூடி வந்திருக்குற இப்பப்போய் இப்படி மாட்டேனா நியாயமா…’’ இத பாருங்க மாமா, நீங்க கெஞ்சிக் கொஞ்சிக் கேட்டாலும் என் முடிவிலே எந்த மாற்றமும் கிடையாது…..’’ “இதுக்கெல்லாம் உன் தங்கச்சிதானே காரணம்….’’ “ம்ம்… நீங்க சொல்றது சரிதான் ஆனா முடிவு […]

மேலும்....

வரலாற்றுச் சுவடு : திருப்பனந்தாள் மடத்தில் பார்ப்பனரின் ஆதிக்கம்!

இரா.முல்லைக்கோ, பெங்களூரு மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் அவர்கள் திருப்பனந்தாள் மடத் தலைவர் சாமிநாதத் தம்பிரான் அவர்களைச் சந்தித்த தகவல்: திருப்பனந்தாள் மடத் தலைவராகத் திருத்தவத் திரு. சாமிநாதத் தம்பிரான் அவர்கள் இருந்த காலத்தில் ஒரு முறை சென்று அவர்களைக் கண்டு, என் தமிழாராய்ச்சியை எடுத்துக் கூறி, அதை வெளியிடப் பொருள் வேண்டினேன். தம்பிரான் அவர்கள், நான் சொன்னதை அமைதியாகச் செவி கொடுத்துக் கேட்டு, அடுத்து வரும் குரு பூசை நாளன்று வரச் சொன்னார்கள். மகிழ்ச்சியோடு திரும்பினேன். ஆயினும், […]

மேலும்....

சமூகநீதி : உலக சமூகநீதி நாள் – பிப்ரவரி 20

சமூகநீதி என்பது சமூகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவைகள், அடிப்படை உரிமைகளை வழங்கி, அவன் மாண்புடன் வாழ வழி அமைத்தல் ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையிலேயே சமூகநீதிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் கூறப்பட்டுள்ள சமூகநீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற நான்கு முதன்மையான கடமைகளில் சமூக, பொருளாதார, அரசியல் நீதியை வழங்குவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பல நூற்றாண்டுகளாக நமது மக்களில் பெரும்பான்மையினருக்கு வாய்ப்புகளும், பயன்களும் மறுக்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள […]

மேலும்....