கவிதை : நரியாரை நடுங்கச் செய்த பெரியார்!

முனைவர் கடவூர் மணிமாறன் பெரியார்க் கெல்லாம் பெரியார் இவரே! நரியார் கூட்டம் நடுங்கச் செய்த அரிமா இவரே! ஆளுமை மிக்க பெரியார் உழைப்பால் பிழைத்தோம்; மீண்டோம்; வல்லிருள் மாய்த்த வைக்கம் மறவர்; நல்லோர் எல்லாம் நாளும் வணங்கும் தலைவர் இவரே! அறிஞர் அண்ணா கலைஞர் போன்றோர் கடமையாற்றிட முன்னேர் பூட்டி முனைப்பாய் உழுதவர்! பன்னருஞ் சீர்த்திப் பண்பின் இமயம்; பகுத்தறி வென்னும் பாதை காட்டி மிகவும் தெளிவாய் மீட்சி விழைந்தவர்; சுயமரி யாதை இயக்கத் தாலே நயமுறு […]

மேலும்....

கபாடியின் மீது விழுந்த ஸ்டார் ஸ்போர்ட்ஸ் பார்வை!

ஒலிம்பிக்கை நோக்கி நகர்கிறதா கபாடி? – சிந்து அறிவழகன் அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியைப் போலவே நம் மண்ணின் விளையாட்டான கபாடி(சடுகுடு)க்கு பன்னாட்டு அளவிலான ஒரு போட்டி தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாபெரும் போட்டியை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிபரப்பி வருகிறது. கிரிக்கெட்டைப் போல சோம்பேறி விளையாட்டாக இல்லாமல் உடல் உழைப்பைத் தரவேண்டிய விளையாட்டாக கபாடி இருப்பதால், தொடக்கம் முதலே இந்த விளையாட்டைப் பணம் படைத்தவர்கள் கண்டுகொள்ளவில்லை. ஆனால், கிராமங்கள்தோறும் இளைஞர்களால் தொடர்ந்து […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்

கேள்வி : ஆன்மீக எண்ணங்களில் மனிதர்கள் மிக எளிதில் அடிமையாகக் காரணம் என்ன? – சா.நாராயணன், மதுரை பதில் : பேராசை, பயம், தெளிவற்ற பாதை குழப்பம் _ இவைதான். ஆன்மீகம் என்பதே புரட்டு. ஆத்மா – ஆன்மி – ஆன்மீகம் = ஆத்மாவே கற்பனைதானே! கேள்வி : பழுதடைந்த கோயில்களை மிக துரிதமாக புதுப்பிக்க முனைவோர் பாழடைந்த கல்விச்சாலைகளை சீரமைக்க எந்த முயற்சியும் மேற்கொள் வதில்லையே? – வீ. அரசு, வேலூர் பதில் : பக்திபோதை, […]

மேலும்....

சிறுகதை – கடவுளால் ஆகாதது

– டி,கே,சீனிவாசன் மணி அடித்தது. கூச்சலும் குழப்பமும் ஒருவாறு அடங்கி அமைதி நிலவ ஆரம்பித்தது. ஆசிரியர் உள்ளே நுழைந்தார். கதாநாயகனை எதிர்பார்த்து கதாநாயகி எப்போ வருவாரோ? எனக் காத்திருப்பதுபோல யாருடைய வரவுக்காகவோ எல்லோரும் காத்திருந்தனர். கட்டுப் புத்தகங்களை மார்போடு கட்டி அணைத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள் அந்தப் பெண்கள். இடத்தில்போய் உட்காரும் வரையில் பார்வையைத் துணைக்கனுப்பி உட்கார்ந்தவுடன் இழுத்துக் கொண்டனர் அத்தனை ஆடவர்களும். பாடம் ஆரம்பித்தது. நான் அன்றுதான் புதிதாக அந்தப் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தேன். நான் படித்த  […]

மேலும்....

வழிகாட்டும் பெரியார் தொண்டர்கள்

96 விடுதலை சந்தாக்கள் தமிழகத்தில் பல முன்னுதாரணங்களைப் பெரியார் பெருந் தொண்டர்களே படைத்திருக்கிறார்கள். அந்த வரிசையில் இரண்டுபேர் பற்றிய செய்தி இது. ஒருவர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.எஸ்.மணியம். இன்னொருவர் மதுரை தமிழக எண்ணைப் பலகாரம் அங்காடி நிறுவனர் பே.தேவசகாயம் அவர்களின் துணைவியார் அன்னத்தாயம்மாள் அவர்கள். அய்யா எஸ்.எஸ்.மணியம் அவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் 96 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடினார். எப்படித் தெரியுமா? நம்முடைய பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு ஆண்டு சந்தாக்களை […]

மேலும்....