… அய்யாவின் அடிச்சுவட்டில் …இயக்க வரலாறான தன் வரலாறு (325)

சிங்கப்பூரில் பெரியாரின் 125ஆம் பிறந்த நாள் விழா! கி.வீரமணி பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள், தமிழவேள் கோ.சாரங்கபாணி அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2004 பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் 125-ஆம் பிறந்த நாளையும், தமிழவேள் கோ.சாரங்கபாணியின் நூற்றாண்டு விழாவையும் ஒரு சேரக் கொண்டாடியது சிங்கப்பூர்தமிழவேள் நற்பணி மன்றம். 1-.3-.2004 மாலை 6 மணிக்கு கிரேத்தா ஆயர் மக்கள் கலையரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நாமும், திரைப்பட நடிகர் ‘இனமுரசு’ சத்யராஜ் அவர்களும் கலந்து […]

மேலும்....

ஆட்டோ ஓட்டுநர் தோழர் பவானி!

ஈரோடு மாவட்டத்தில் 13 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் பவானி, எத்துறையிலும் பெண்களால் பணிபுரிய முடியும். சாதிக்க முடியும் _ என முன்னுதாரணமாகத் திகழ்பவர் 50 வயதான இவர் எவர் சார்பும் இன்றி, தன் கடின உழைப்பால் வாழ்ந்து வருகிறார். ஈரோடு மாவட்டம் சூரம்பட்டிவலசு ஊரைச் சேர்ந்தவர் பவானி. இவரின் கணவர் 2010இல் சாலை விபத்தில் இறந்துவிட்டார். அப்போது இவருக்கு 37 வயது. கணவரின மரணத்தால் இவரின் வாழ்க்கையே மாறிப்போனது. கட்டட வேலை, மருத்துவமனையில் ஆயா வேலை எனப் […]

மேலும்....

பவுத்தத்தின் வீழ்ச்சியை வரவேற்கும் பாரதியார்

– தஞ்சை பெ. மருதவாணன் சனாதன தர்மத்தை நிலைநாட்ட கொலை பாதகம் உட்பட எந்த அதர்மத்தையும் செய்யலாம் என்பது ஆரிய தர்மத்தின் கொள்கை. கொலை நூலாகிய பகவத்கீதையின் கருத்தும் இதுவே. இக்கொலை பாதகத்தை ஆதரித்துக் காஞ்சிப் பெரியவாள் என்று அழைக்கப்படும் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளிய இருளுரை வருமாறு:- “தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது எப்படி இருந்தாலும் பண்ணவேண்டும். இம்சை என்று பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்கொள்ளவில்லையா? அப்படிப் […]

மேலும்....

கருப்புக் கயிறு

ஆறு.கலைச்செல்வன் கராத்தே மாஸ்டர் அன்புச்செல்வன் நடத்தும் கராத்தே பள்ளியில் அங்கு பயிற்சி பெற்றுவரும் மாணவ- மாணவிகள் மிகவும் கவலையில் இருந்தார்கள். காரணம், பல ஆண்டுகளாக அவர்கள் கராத்தே பயிற்சி மேற்கொண்டும் அவர்களுக்கு கராத்தே போட்டிகளில் பங்கு பெற வாய்ப்புக் கிட்டவில்லை. ‘நாட்டில் எந்த இடத்திலும் மாவட்ட, மாநில அளவில் கராத்தே போட்டிகளே நடக்கவில்லையா?’அல்லது மாஸ்டர் நம்மை அழைத்துச் செல்லவில்லையா? எனத் தங்களுக்குள் பேசி வருத்தப்பட்டனர். எவ்வளவு காலம்தான் பயிற்சியில் இருப்பது, தங்களது திறமைகளை போட்டிகளில் கலந்துகொண்டால் மட்டும்தானே […]

மேலும்....

மூளைச் சலவை

யூதர்கள் இரகசிய அறிக்கை நம்மைத் தவிர, உலகில் நிறுவனப்படுத்தப்பட்ட ஒற்றுமை சக்திகள் எதுவும் இருக்கக்கூடாது. ஆரம்பக் கட்டத்திலேயே அவை காயடிக்கப்பட வேண்டும். பல்வேறு சக்திகள் ஒன்றுபடுவதற்கு ஆரம்பக் களமாக விளங்குவது பல்கலைக்கழகங்கள். எனவே, அத்தகைய பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகளையும் கல்வித் திட்டங்களையும் நமது திட்டங்களுக்கு ஏதுவான திசையில் மாற்றியமைக்க வேண்டும். பல்கலைக்கழகத் தலைவர்களும் பேராசிரியர்களும் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பதை நமது இரகசியத் திட்டம் தீர்மானிக்கும். ஒரு சிறிதும் அதிலிருந்து அவர்கள் வழுவிச் செல்ல முடியாது. நாம் வகுத்துக் […]

மேலும்....