நீ கம்ப்யூட்டரைக் கண்டுபிடித்திருந்தால் தானே அதற்கு பெயர் இருக்கும்?

பல பேராசிரியர்களே கணினியைக் கண்டிராத அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் முக்கிய தலைவர் ஒருவர், கிண்டி பொறியியல் கல்லூரிக்கு வந்து கணினியைக் காண விரும்பினார். அவருக்கு வயது 86. படியேற முடியாது. அவரை ஒரு நாற்காலியில் அமர வைத்து மாடிக்குத் தூக்கிச் சென்றனர். கணினி பற்றித் தனக்குச் சொல்லப்பட்ட விளக்கங்களை எல்லாம் ஆர்வமாகக் கேட்டுக்கொண்ட அவர், “இந்த அட்டையிலிருந்து தகவல்கள் எப்படி கம்ப்யூட்டருக்குப் போகிறது?” என்ற கூடுதல் வினா எழுப்பி விளக்கம் பெற்றுக் கொண்டார்.     நடுவில், தன்னுடன் வந்திருந்தவரிடம் […]

மேலும்....

தகவல்

புற்று நோய் வராமல் காக்கும் கருப்புத் திராட்சை! கருப்புத் திராட்சை பல்வேறு மருத்துவக் குணங்களுடன் உடலைச் சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இதில் வைட்டமின் டி, மாவுச் சத்து, ஆன்டி ஆக்ஸிடென்ட்டுகள் அதிகம் உள்ளன. திராட்சை விதையையும் சேர்த்து நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஏனெனில், அதன் விதைகளில் உள்ள உட்கூறு, புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது மட்டுமல்லாமல், உடலிலுள்ள மற்ற செல்களுக்கு எந்தத் தீமையும் செய்வதில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது. இரத்தக் கொதிப்பு, இரத்தக் குழாய்களில் […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : இலவசங்கள் ஏழைகளுக்கு மட்டுமே!

  கே:       சமத்துவபுரங்களில் ஜாதி மறுப்பு மணம் புரிந்தவர்களுக்கு இடம் ஒதுக்கினால் அதன் நோக்கம் கூடுதலாக நிறைவேறுமல்லவா?                – வ.கீதா, வேலூர்     ப:       நல்ல யோசனை. தமிழ்நாடு அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய அரிய யோசனை. முதலில் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் சீரமைப்புப் பணிகள் முடியட்டும். புதியவர்கள் எடுக்கும்போது இது சாத்தியப்படக்கூடும். கே:       சிதம்பரம் நடராசர் கோயிலில் தமிழில் வழிபாடு செய்ய சட்டத்தடை உள்ளதா?                – க.சிவசுப்பிரமணியன், திண்டிவனம் ப:           எந்த […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (275)

திராவிடர் கழகம் ஒரு திறந்த புத்தகம்! கி.வீரமணி தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் கோ.அரங்கநாதனின் இளைய மகன் ஆர்.அண்ணாதுரைக்கும், நடராசனின் மகள் என்.கஜலட்சுமிக்கும் வாழ்க்கை ஒப்பந்த வரவேற்பு விழா 15.12.1996 அன்று சென்னை இந்திரா நகர் சமூக நலக் கூடத்தில் நடைபெற்றது. மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திச் சிறப்புரையாற்றினேன். தாம்பரம் மாவட்டக் கழகச் சார்பில் வாழ்த்து மடல் அளிக்கப்பட்டது. விழாவில் கழகத்தின் பொறுப்பாளர்களும், அழைப்பாளர்களும் பெருமளவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சமூகநீதி மாநாட்டின் மூன்றாம் […]

மேலும்....

சிந்தனை : ஒலிம்பிக் போட்டியும் புதிய இந்தியாவும்

முனைவர் வா.நேரு ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது அதுவும் தங்கப் பதக்கம் வெல்வது என்பது ஒவ்வொரு நாடும், தனது பெருமையெனக் கருதுகிறது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு ஒவ்வொரு நாடும் தனது வீரர்களை முன்கூட்டியே தயார் செய்கிறது. பிறந்த சில ஆண்டுகளிலேயே தனித்துவமாக விளங்கும் சிறுவர் சிறுமியர்களுக்குப் பயிற்சி அளித்து, அவர்களைத் தங்கப் பதக்கம் வாங்கும் ஒலிம்பிக் வீரர்/வீராங்கனைகளாக ஆக்கி, அவர்களைப் பெருமைப்படுத்துவதோடு, தனது நாட்டிற்கும் பெருமை தேடிக் கொள்கிறது. ஆனால் இந்தியாவில்?….. 2021, […]

மேலும்....