பா.ஜ.க. அரசின் பாடத் திட்டத்தில் ஆசாராம்!

வசுந்த்ரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு, கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் குறித்து அரசு பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளது, அதில் இந்து சாதுக்கள் என்ற தலைப்பில் “மக்களை வழிநடந்த வந்த புனிதர்! இவர் தனது ஆன்மிக பலத்தால் மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர். இவரை குருவாக நினைத்த மக்கள் வாழ்க்கையில் பெரும் புகழை அடைந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. காமுகன்தான் பிஜேபி ஆட்சியின் கதாநாயகன்! தெரிந்து கொள்க!   மோடி செல்லுமிடம் “எனக்கு மன உளைச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் […]

மேலும்....

“எங்கள் கடவுள் கிருஷ்ணன் செய்ததை நானும் செய்தேன்!”

 ஆசாராம் சாமியார் ஆசாராம் நீதிமன்றத்தில் வாதாடிய போது எடுத்துக்கூறிய விவாதம் குறித்த தகவல்களை சாட்சிகள் தரப்பு வழக்குரைஞர் வெளியிட்டு வருகிறார்.  அதில் ஒன்று நீதிபதியிடம் ஆசாராம் கூறியதாவது:  “எங்களது கடவுள் கிருஷ்ணன் பல பெண்களுடன் ஒரே நேரத்தில் கூடியிருந்தார், அதை இந்துக்கள் தெய்வச்செயலாக பார்க்கிறோம், அதே போல்தான் நாங்களும். பிரம்மசொரூபமான சாதுக்களாகிய நாங்கள் பெண்களுடன் சேருவது தெய்வீகச் செயலுக்கு ஒப்பானதாகும், மக்கள் என்னை தெய்வமாகப் பார்க்கின்றனர். நான் மக்களுக்கான பல நல்ல செயல்களைச் செய்துள்ளேன், எனது இந்தச் […]

மேலும்....

மருத்துவம் : விதி நம்பிக்கையை விலக்கிய அதி நவீன மருத்துவங்கள்! [33]

நீரிழிவு நோய் இன்றைய நிலையில் நடுத்தர வயது மக்களை அதிகம் பாதிக்கக் கூடிய நோயாக உள்ளது. இந்நோய் ஒரு வளர்சிதை மாற்றநோய் (Metabolic disease). கணையத்தின், லாங்கர்ஹான் திட்டுக்களில் சுரக்கும் இன்சுலின் சுரப்பு குறைவினாலோ, இன்சுலினை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டாலோ இந்நோய் உண்டாகிறது. இன்சுலின் என்ற ‘ஊக்கி நீர்'(Hormone) இரத்தத்தில் உள்ள சர்க்கரையை, செல்களில் செலுத்துகின்ற பணியை செய்கிறது. செல்களுக்கு செலும் சர்க்கரைதான், செல்களுக்கு இயங்கும் சக்தியையும், செல்களில் சேர்த்தும் வைக்கப்படுகிறது நீரிழிவு நோய்க்கு […]

மேலும்....

அய்யாவின் அடிச்சுவட்டில்… : இயக்க வரலாறான தன் வரலாறு (271)

பெரியார் திடல் மீது தாக்குதல் முறியடிப்பு கி.வீரமணி சட்ட விரோதமாகத் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.பி.ஜீவன்ரெட்டி, கே.எஸ்.பரிபூர்ண அய்யங்கார் ஆகியோரின் கொடும்பாவி எரிப்புப் போராட்டம் தமிழ்நாடு முழுவதும் 23.8.1996 அன்று கழகத் தோழர்களின் முழு ஒத்துழைப்போடு நடைபெற்றது. தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. 31சி சட்டம் நிறைவேற்றப்பட்டு அரசியல் சட்டம் ஒன்பதாவது அட்டவணைப் பாதுகாப்பும் பெற்றுள்ளது. 9ஆவது அட்டவணைப் பாதுகாப்புப் பெற்றுவிட்டால் அதில் எந்த நீதிமன்றமும் தலையிட முடியாது என்பதுதான் சட்டத்தின் நிலை. […]

மேலும்....

பெண்ணால் முடியும் : தமிழ்நாட்டின் வாள் வீச்சி ராணி

ஒலிம்பிக்கில் வாள்வீச்சு விளையாட்டு என்பது இந்தியர்களைப் பொறுத்தவரை யாரும் அதிகமாக தேர்வுச் செய்யாத விளையாட்டு. அந்த விளையாட்டில் தமிழகத்திலிருந்து, முதன்முறையாக ஒலிம்பிக்கில் இந்தியர் ஒருவர் வாள்வீச்சுப் போட்டியில் கலந்துகொள்வதை உலகமே காணப்போகிறது. அந்தப் பெருமைக்கு சொந்தக்காரர் சென்னையைச் சேர்ந்த பவானி தேவி. சென்னையில் வட சென்னை பழைய வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்தவர் பவானி தேவி. தண்டையார்பேட்டையில் முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அம்மாவின் கையைப் பற்றிக் கொண்டு வாள்வீச்சு மய்யத்துக்கு வந்த பவானி தேவி. […]

மேலும்....