பா.ஜ.க. அரசின் பாடத் திட்டத்தில் ஆசாராம்!

ஜுலை 1-15,2021

வசுந்த்ரா ராஜே தலைமையிலான ராஜஸ்தான் அரசு, கடந்த 2013ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் குறித்து அரசு பாடப்புத்தகத்தில் சேர்த்துள்ளது, அதில் இந்து சாதுக்கள் என்ற தலைப்பில் “மக்களை வழிநடந்த வந்த புனிதர்! இவர் தனது ஆன்மிக பலத்தால் மக்களை ஒருங்கிணைக்கும் வல்லமை பெற்றவர். இவரை குருவாக நினைத்த மக்கள் வாழ்க்கையில் பெரும் புகழை அடைந்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காமுகன்தான் பிஜேபி ஆட்சியின் கதாநாயகன்! தெரிந்து கொள்க!


 

மோடி செல்லுமிடம்

“எனக்கு மன உளைச்சல் ஏற்படும் பொழுதெல்லாம் நான் தேடிச் செல்லும் இடம் சாமியார் ஆசாராமின் மோட்சக் குடில்தான்!

– பிரதமர் நரேந்திரமோடி


 

எங்கே இந்த சல்லாபம்?

குஜராத் மாநிலம் தபோயில் உள்ளது வட்தால் சுவாமி நாராயணன் கோயில் அக்கோயிலுக்குள்ளே இருந்த குடிலிலேயே அர்ச்சகப் பார்ப்பனர்கள் சந்த் தேவ்வல்லப், பக்தைகளிடம் ஆடிய சல்லாபம் (சந்தேஷ் பத்திரிகை படத்துடன் வெளியிட்டதுடன் சந்தேஷின் இணையதளத்திலும் வெளியிடப்பட்டது.)


 

ஒரு வரிச் செய்திகள்

வயிற்றில் பற்கள் உடையது நண்டு.

தலையில் இதயம் உடையது இறால்.

தலையை வெட்டினாலும் சில வாரம் வாழுவது கரப்பான் பூச்சி.

குதிக்காத விலங்கு யானை.

நீலஇரத்தம் உடையது ஆக்டோபஸ்.

நான்கு மூக்கு உடையது நத்தை.

பின்நோக்கிப் பறப்பது ஹம்மிங் பறவை.


 

2021 தேர்தலில் பெண்கள் அதிக வாக்களிப்பு

தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், ஆண்களைவிட மொத்தம் 5,68,580 பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மொத்தம் 4,57,76,311 வாக்குகளில், 2,31,71,736 பெண்களும், 2,26,03,156 ஆண்களும், 1,419 பிற பாலினத்தவரும் வாக்களித்துள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிகமாக வாக்களிக்கத் தொடங்கிய போக்கு 2016 தமிழகத் தேர்தலில் ஆரம்பித்தது. 2019லும் குறிப்பிட்ட சதவிகிதத்தில் ஆண்களைவிட பெண்களே அதிகம் முன்வந்து வாக்களித்துள்ளனர்.


 

பதிலும் மூடநம்பிக்கையும்

மத்தியப் பிரதேச அமைச்சர் ஒருவர் கொரோனாவை விரட்ட, சாமி சிலை முன்பு கைதட்டி பூஜை செய்ததை என்னவென்று சொல்வது?

மத்தியப் பிரதேச சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை அமைச்சர் உஷா தாக்கூர் பத்தித்தானே கேட்கறீங்க… பூஜையைவிட, அதை விமான நிலையத்துல நடத்தினதுக்கு அவரின் ஆதரவாளர்கள் சொன்ன காரணம்தான் ‘ஜெர்க்’ ஆக்குது. “வெளிநாட்டிலிருந்து விமானம் மூலம்தானே கொரோனா வருகிறது… அதை இங்கேயே தடுத்துடுவோம்னு நடத்தினோம்’’ என்கிறார்களாம்!

(நன்றி: ஜூனியர் விகடன், 8.4.2021)


 

ஒரு வரிச் செய்திகள்

நீலத் திமிங்கிலம் மூன்று யானை எடை உடையது.

பறக்கும் பாலூட்டி வவ்வால்.

இரண்டு மூளை உடையது குரங்கு.

குறைந்த வாழ்நாள் உடையது ஈசல்.


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *