ஏடாகூடம் ஏதுசாமி

ஜூலை 01-15

சாய்பாபா அறையில் 11 கோடி ரூபாய் ரொக்கம், 98 கிலோ தங்கம், 307 கிலோ வெள்ளி! – செய்தி

போச்சு… ஒரு மேஜிக்மேன் காவி வேஷம் போட்டா, இவ்வளவெல்லாம் சம்பாதிக்க முடியும்னு, மேஜிக் தொழில் பண்றவங்கெல்லாம் காவி வேஷத்தில் களத்தில இறங்கப் போறாங்க….!


குதிரை சவாரி செய்தபோது தவறி விழுந்து நித்யானந்தாவுக்கு கை எலும்பு முறிவு! — செய்தி

இந்த குண்டலினி யோகம், அப்புறம் என்னென்னமோ புதுசு புதுசா  கண்டுபுடிச்சு வச்சிருக்க யோகாசனம், தியானம், அது போக லாகிரிவஸ்து இதெல்லாம் எலும்பு முறிவைச் சரி பண்ணாதோ?

அடப்போங்கப்பா… இன்னும் மோசமா தான் வருது கமெண்டெல்லாம்….


கங்கையைக் காக்க உயிர் விட்ட சாது நிகமானந்தா! – செய்தி

பொழைக்கத் தெரியாத மனுஷன்யா… ஸ்பான்சர் புடிச்சோமா, 15 கோடிக்கு மேடை செட் போட்டோமா, இந்தியா முழுக்க பிரபலம் ஆனோமா, பணத்தை அள்ளினோமான்னு இல்லாம, இப்படி உண்மையா உண்ணாவிரதம் இருந்து அல்ப ஆயுசுல போயிட்டாரே…!

 

– கருத்தும், படமும் : கர்ணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *