நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

2022 மற்றவர்கள் ஜூன் 16-30 2022

27.5.2022 முதல் 10.6.2022 வரை
27.5.22 நீட் தேர்வு விலக்கு, ஒன்றிய அரசின் ஜி.எஸ்.டி. நிதி பங்களிப்பை அதிகரிக்க வேண்டும். சென்னையில் நடந்த விழாவில் பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை.
27.5.22 பிற்படுத்தப்பட்டோர் ஆணைய கூட்டத்தில் உள் ஒதுக்கீட்டை விவாதிக்கக் கூடாது – மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு.
27.5.22 மங்களூரு மசூதி கோயிலாக இருந்ததாக பஜ்ரங் தளம் போர்க்கொடி – 144 தடை உத்தரவு அமல்.
28.5.22 ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 21 நாள் இலவச யோகா பயிற்சி.
28.5.22 இந்துக்களின் உரிமைகளை மீட்க தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணம் ஜூன் 28 முதல் இந்து முன்னணி அறிவிப்பு.
29.5.22 தாய்மொழியை வளர்க்க வேண்டும். மொழியை திணிக்கவோ, எதிர்க்கவோ வேண்டாம். கருணாநிதி சிலை திறப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு.
29.5.22 பா.ம.க. தலைவராக அன்புமணி தேர்வு.
29.5.22 36 ஆயிரம் கோயில்கள் அழிப்பு கர்நாடகாவில் ஈஸ்வரப்பா பேச்சால் சர்ச்சை.
30.5.22 சுயமரியாதை உணர்வு, சமத்துவ சிந்தனையை வளர்க்கும் விதத்தில் பயிற்சிப் பாசறைக் கூட்டங்கள் – முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
30.5.22 பிஹாரின் ஜமுய் பகுதியில் தங்கம்வெட்டி எடுப்பதற்கு அனுமதி வழங்க ஆலோசனை.
31.5.22 விவசாயிகள் சங்கத் தலைவர் மீது பெங்களூருவில் கறுப்பு மை வீச்சு.
31.5.22 சிதம்பரம் நடராஜர் கோயில் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய தீட்சிதர்கள் எதிர்ப்பு.
31.5.22 கோயில் சிலைகளை புனரமைப்பதாக நிதி திரட்டிய யூடியூபர் கார்த்திக் கோபிநாத் கைது.
1.6.22 மே மாதம் வரையிலான ஜி.எஸ்.டி. இழப்பீடு தமிழகத்துக்கு ரூ.9,602 கோடி ஒதுக்கீடு.
1.6.22 9ஆம் வகுப்பில் தொழிற்கல்வி பாடம் – வரும் கல்வியாண்டு முதல் நிறுத்தம் – பள்ளிக் கல்வித் துறை.
1.6.22 பழங்குடியினர் நலத்துறைக்கு ஒதுக்கிய ரூ.265 கோடி நிதி பயன்படுத்தாமல் திரும்ப ஒப்படைப்பு – தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல்.
2.6.22 பத்திரப்பதிவுக்கு தமிழ்நாட்டில் முதல்முறையாக ‘தட்கல்’ முறை அறிமுகம்.
2.6.22 தேசிய கல்வி அமைச்சர்கள் மாநாடு தமிழக அமைச்சர்கள் புறக்கணிப்பு.
2.6.22 பிரதமர் காப்பீட்டுத் திட்டங்களின் பிரீமியம் உயர்வு!
2.6.22 பாஜக வளர்வது நல்லது அல்ல! அதிமுக மேனாள் அமைச்சர் பொன்னையன்.
3.6.22 21 மசோதாக்களுக்கு ஒப்புதல் தர வேண்டும் – ஆளுநரை சந்தித்து முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.
3.6.22 ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு பிகாரில் மந்திரிசபை ஒப்புதல்.
4.6.22 சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்த அமெரிக்க அறிக்கைக்கு இந்தியா கண்டனம்.
4.6.22 சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியல் பரப்புரைக்கான தடையை விலக்கி – துணைவேந்தர் அறிவிப்பு.
5.6.22 6 கோடி தொழிலாளரை வஞ்சித்து 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் இ.பி.எப். வட்டி விகிதம் குறைப்பு.
5.6.22 இலங்கைக்கு கூடுதல் உதவி – தூதரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி.
5.6.22 சென்னை அய்.அய்.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை – ஓபிசி அமைப்பினர் குற்றச்சாட்டு.
6.6.22 பாஜக தில்லி ஊடகப் பிரிவு தலைவர் நவீன் குமார் ஜிண்டால் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சை கருத்து – இஸ்லாமிய நாடுகள் கண்டனம்.
6.6.22 அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருந்து இந்து ஆலயங்களை விடுவிக்க வேண்டும் – பேரூர் ஆதினம்.
7.6.22 ரூபாய் நோட்டில் மகாத்மா காந்தி படத்தை மாற்றும் திட்டமில்லை – ரிசர்வ் வங்கி
7.6.22 நபிகள் நாயகம் சர்ச்சை கருத்து 2 பாஜக பிரமுகர்களை கைது செய்ய – காங்கிரஸ் வலியுறுத்தல்.
8.6.22 பெங்களூருவில் ஹிஜாப் தடைக்கு எதிராகப் போராடிய முஸ்லிம் மாணவிகள் 24 பேர் கல்லூரியிலிருந்து நீக்கம்.
8.6.22 சிதம்பரம் நடராஜர் கோயிலின் கணக்குகளை இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் காட்ட தீட்சிதர்கள் மறுப்பு.
9.6.22 கடலூர் கண்ணகி-முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் 9 பேருக்கு ஆயுள் தண்டனை உறுதி.
9.6.22 பிகாரில் மதமாற்ற தடைச் சட்டம் தேவையில்லை – நிதிஷ்குமார்.
9.6.22 சுற்றுச்சூழல் செயல்திறன் குறியீடு பட்டியலில் கடைசி இடம் இந்தியா.
10.6.22 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு; உறுதி செய்ய உயர்நிலைக்குழு – தமிழ்நாடு அரசு.
10.6.22 சென்னை உயர்நீதி மன்றத்திற்கு முதல்முறையாக ‘சோப்தார்’ பதவிக்கு பெண் நியமனம்.
தொகுப்பு: சந்தோஷ்