நாளும் செய்தியும் ஒரு வரிச்செய்தி

2022 மற்றவர்கள் ஜூன் 1-15 2022

12.5.2022 முதல் 26.5.2022 வரை

12.5.22  தேசத் துரோக சட்டத்துக்கு இடைக்காலத் தடை – உச்சநீதிமன்றம்

12.5.22 அய்.நா.வில் இந்தியைப் பிரபலப்படுத்த இந்தியா ரூ.6 கோடி அளித்துள்ளது.

12.5.22 87 வயதில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற அரியானா மேனாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா

12.5.22 நீதிமன்றங்கள் லட்சுமணன் கோட்டை மீறக் கூடாது – சட்ட அமைச்சர் ரிஜிஜு கருத்து

12.5.22 தாஜ்மகால் அமைந்துள்ள இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தம் – பாஜக எம்.பி. கருத்து

13.5.22 இலங்கை புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவி ஏற்பு

14.5.22 எந்த மொழியையும் ஒன்றிய அரசு திணிக்கவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

14.5.22 இந்தி படித்தவர்கள் பானிபூரிதான் விற்கிறார்கள் – அமைச்சர் பொன்முடி

14.5.22 ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த அனுமதி; தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

14.5.22 நிலவிலிருந்து கொண்டுவந்த மண்ணில் செடி முளைத்தது – நாசா விஞ்ஞானிகள் சாதனை!

15.5.22 குரூப்-1 அதிகாரிகளுக்கு அய்.ஏ.எஸ். பதவி உயர்வு: தமிழ்நாடு ஆட்சிப் பணியை உருவாக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

15.5.22 செல்போன் பயன்படுத்துவதில் இந்தியக் குழந்தைகள் முதலிடம் – மெக்கபே அறிக்கை

15.5.22 மாநிலப் பயிற்சி மய்யமா (அ) தேசிய மய்யமா என்பதை தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுதான் முடிவு செய்ய முடியும் – உயர்நீதிமன்றம் தீர்ப்பு

16.5.22 கரோனா காலத்தில் பதிவான 10 லட்சம் வழக்குகள் வாபஸ்

16.5.22 தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பொறுப்பேற்பு

16.5.22 குற்றவாளிக்கு முன்கூட்டியே விடுதலை: மாநில கொள்கையின் அடிப்படையில் முடிவு – உச்சநீதிமன்றம்

17.5.22 கங்கையில் மீட்கப்பட்ட சடலங்கள்: உ.பி., பிகார் அரசுகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி.

17.5.22 விவசாயிகளைத் துன்புறுத்தும் வங்கிகள் – உச்சநீதிமன்றம் கண்டனம்

17.5.22 வாரணாசி ஞானவாபி மசூதி¢ல் சிவலிங்கம் – சீல் வைக்க நீதிமன்றம் உத்தரவு

18.5.22 தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.133 கோடி மதிப்பிலான நிவாரணப் பொருள்களுடன் இலங்கைக்கு கப்பல் புறப்பட்டது.

18.5.22 காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் இரு பிரிவினரின் பிரச்சினை: வடகலைப் பிரிவினரும் வேத பாராயணம் பாட அனுமதி – உயர்நீதிமன்றம் உத்தரவு

19.5.22 பேரறிவாளன் விடுதலை: உச்சநீதிமன்றம் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிரடித் தீர்ப்பு.

19.5.22 இந்திய எல்லை அருகே புதிய பாலம் கட்டும் சீனா: செயற்கைக்கோள் புகைப்படங்களால் அதிர்ச்சி.

19.5.22 முஸ்லிம் வழிபாட்டுத் தலங்களைக் குறி வைப்பது ஏன்? அரசுகளுக்கு முஸ்லிம் சட்ட வாரியம் கேள்வி.

20.5.22 ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்தாது.

20.5.22 சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட அனுமதி – தமிழ்நாடு அரசு அரசாணை.

20.5.22 கருநாடக பாடப் புத்தகத்தில் இருந்து தந்தை பெரியார் வரலாறு நீக்கம் – சித்தராமையா கண்டனம்.

21.5.22 மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சி – மோடி விமர்சனம்

21.5.22 தமிழ் தெரியாத ரயில்வே ஊழியர்கள் தமிழைக் கற்றுக்கொள்ள வேண்டும் – ஒன்றிய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.

21.5.22 முதுகலை நீட் தேர்வு பயத்தில் பெண் டாக்டர் தற்கொலை

22.5.22 குரூப் 2 தேர்வு: 9.94 லட்சம் பேர் எழுதினர்.

23.5.22 ம.பி.யின் போபால் ஜாமியா மசூதிக்கும் சிக்கல் – கோயிலை இடித்துக் கட்டியதாக இந்துத்துவா அமைப்புகள் புகார்.

23.5.22 ஓராண்டை நிறைவு செய்த முதல்வர் ஸ்டாலின்: செயல்பாடுகளில் 85 சதவிகித மக்களுக்குத் திருப்தி.

24.5.22 மதரசாக்களில் முறையான கல்வி இல்லை – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா கருத்து.

24.5.22 இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 13 நாடுகளின் புதிய கட்டமைப்பு தொடக்கம்.

24.5.22 ஜப்பானில் புத்த மதம் பரப்பிய மதுரைத் தமிழர் போதிசேனா

25.5.22 கோயில்களை அவுரங்கசீப் உடைத்தார் என்பதற்காக அரசும் அதைச் செய்யுமா? – பேராசிரியர் இர்பான் ஹபீப்

25.5.22 திருவிழாக்களில் நடத்தப்படும் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது. மீறினால் ரத்து செய்ய உத்தரவு – மதுரை உயர்நீதிமன்றம்.

26.5.22 வெள்ளியங்கிரி மலை ஏறிய உயர்நீதிமன்ற வக்கீல் பலி

26.5.22 நன்கொடை வசூலித்து தில்லுமுல்லு: 2,100 கட்சிகள் மீது நடவடிக்கை – தேர்தல் ஆணையம் அறிவிப்பு

26.5.22 அமெரிக்கப் பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு – 19 மாணவர்கள் உள்பட 21 பேர் பலி.

தொகுப்பு: சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *