நாளும் செய்தியும் : ஒரு வரிச்செய்தி

2022 மே 16-31 2022

27.4.2022 முதல் 11.5.2022 வரை
27.4.22 கருணாநிதி பிறந்த நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் – சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு.
27.4.22 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்.பி.க்களின் சிறப்பு ஒதுக்கீடு ரத்து – மத்திய அரசு அதிகாரபூர்வ அறிவிப்பு.
27.4.22 குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியர்களின் உரிமையைப் பறிக்காது – உள்துறை அமைச்சகம்.
28.4.22 தாஜ்மகாலுக்கு வந்த அயோத்தி மடத்தின் துறவி – அனுமதி மறுக்கப்பட்டதால் சர்ச்சை.
29.4.22 தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவில் தேர் மின்கம்பியில் உரசியதால் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழப்பு.
29.4.22 உ.பி.யின் பனாரஸ் இந்து பல்கலை.யில் இப்தார் விருந்து நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு.
29.4.22 இந்தி மொழி தேசிய மொழியா என்பது பற்றி நடிகர்கள் அஜய்தேவ்கன், சுதீப் கருத்து.
30.4.22 டி.என்.பி.எஸ்.சி. குருப்-4 தேர்வுக்கு 7,138 காலிப் பணியிடங்களுக்கு 22 லட்சம் பேர் விண்ணப்பம்.
29.4.22 கடந்த 8 ஆண்டுகளில் மிகப் பெரிய அளவில் இந்தியாவில் மதக் கலவரம் நடைபெறவில்லை. அய்ரோப்பிய நாடுகள் குழுவிடம் – மத்திய அமைச்சர் விளக்கம்.
29.4.22 அயோத்தி மசூதிகளில் ஆட்சேபகரமான பொருள்களை வீசி கலவரம் தூண்ட முயற்சி முஸ்லிம்கள் போல் வேடமிட்டு வந்த 7 பேர் கைது.
1.5.22 நீதிமன்றங்களில் உள்ளூர் மொழி – பிரதமர் மோடி வலியுறுத்தல்.
1.5.22 திருமருகல் திருவிழா சப்பரத்தில் சிக்கி இளைஞர் பலி.
1.5.22 சட்ட அடிப்படையிலான நிருவாகத்தில் நீதித்துறை தலையிடாது – தலைமை நீதிபதி என்.வி.ரமணா.
1.5.22 யோகா மூலம் ஞானத்தின் சிகரத்தை எட்ட முடியும் – ஆர்.எஸ்.எஸ். தலைவர்.
1.5.22 உ.பி. மத வழிபாட்டு தலங்களிலிருந்து அனுமதியற்ற 46,000 ஒலிபெருக்கிகள் அகற்றம்.
2.5.22 வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை.ரூ.102 அதிகரிப்பு.
2.5.22 பாடப் புத்தகத்தில் மத்திய அரசு பெயர் மாற்றம் – பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தகவல்.
2.5.22 உ.பி.யில் வேலை வாங்கித் தருவதாக ஆன்லைன் மூலம் ரூ.3000 கோடிக்கு மேல் மோசடி.
3.5.22 தடுப்பூசி செலுத்துமாறு கட்டாயப்படுத்தக் கூடாது – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.
3.5.22 ஆதினத்தை பக்தர்கள் பல்லக்கில் சுமக்க தடை – மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு.
3.5.22 உத்தரகாண்ட் மாநில பள்ளிப் பாடத்திட்டத்தில் பகவத் கீதை, ராமாயணத்தை சேர்க்கத் திட்டம்.
4.5.22 மகரிஷி சரகர் உறுதிமொழி எடுத்த அனைத்து மருத்துவக் கல்லூரிகளின் டீன்கள் மீதும் நடவடிக்கை உறுதி – மருத்துவக் கல்வி இயக்குநர் தகவல்.
5.5.22 பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு.
5.5.22 அட்சய திருதியை தினத்தன்று தமிழ்நாட்டில் 20 டன் தங்க நகைகள் விற்பனை.
5.5.22 ‘நீட்’ விலக்கு தொடர்பான சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் ஆளுநர் – முதலமைச்சர் ஸ்டாலின் தகவல்.
6.5.22 இந்தியாவின் ஆன்மிகத் தலைநகரம் தமிழ்நாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி.
6.5.22 கரோனா வைரஸ் தொற்று நீங்கிய பிறகு குடியுரிமை திருத்தச் சட்டம் நிச்சயம் அமல்படுத்தப்படும் – அமித்ஷா உறுதி.
6.5.22 எல்.அய்.சி. பங்கு விற்பனை 3ஆவது நாளில் 98% முன்பதிவு.
7.5.22 மன்னார்குடி ஜீயர் மீது நடவடிக்கை கோரி போலிஸில் தி.க. புகார்.
8.5.22 வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு, ஒரு சிலிண்டர் விலை ரூ.1015.
8.5.22 ரூ.2,500 கோடி கொடுத்தால் கருநாடக முதலமைச்சர் பதவி – பாஜக எம்எல்ஏ குற்றச்சாட்டு.
8.5.22 இந்தியாவில் கடந்த நிதி ஆண்டில் ரூ.7.92 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய முதல் நிறுவனம் ரிலையன்ஸ்.
9.5.22 கோயில் விவகாரங்களில் அரசு தலையிடுவது நல்லதல்ல – சசிகலா.
9.5.22 மலேசியா, இந்தோனேசியாவில் இருந்து 4.80 லட்சம் டன் நிலக்கரி இறக்குமதி – தமிழ்நாடு மின்வாரிய அதிகாரிகள் தகவல்.
9.5.22 தருமபுரம் ஆதினத்தின் பட்டணப் பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் – மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவு.
10.5.22 இலங்கைப் பிரதமர் மகிந்த ராஜபக்ச ராஜினாமா.
10.5.22 தமிழைப் புறக்கணித்து இந்தியைத் திணிக்க வில்லை – ஆளுநர் தமிழிசை விளக்கம்.
10.5.22 மயிலாடும்பாறை தொல்லியல்: 4,200 ஆண்டுகளுக்கு முன்பே இரும்பைப் பயன் படுத்தியவர்கள் தமிழர்கள் – முதலமைச்சர்.
10.5.22 நாட்டில் அனைத்திலும் தனியார் துறை வரலாம் – நிர்மலா சீதாராமன் கருத்து.
10.5.22 கருநாடகாவில் பாங்குக்கு (தொழுகை அறிவிப்பு) போட்டியாக கோயில்களில் பக்திப் பாடல்கள் ஒலிபரப்பு.
11.5.22 துணைவேந்தர் நியமனம் உள்பட 20 மசோதாக்கள் பேரவையில் நிறைவேற்றம்.
11.5.22 23 மாவட்டங்களில் ஆயுதப்படை சட்டம் வாபஸ் – அமித்ஷா
11.5.22 இந்துக்களுக்கு சிறுபான்மை அந்தஸ்து: தெளிவான முடிவு எடுக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு.ஸீ
தொகுப்பு: சந்தோஷ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *