கருத்துரிமையை நசுக்கும் அரசுகளின் சட்டங்கள்

அக்டோபர் 01-15

திராவிடர் இயக்கத்தின் மேடைகள், என் தம்பிமார்களால் மாலை நேரத்து கல்லூரி வகுப்புகளாக மாறி வருகிறது என்று குதூகலமாக சொன்னவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அதற்கான வாய்ப்பினை சமீபகாலமாக அ.தி.மு.க அரசு மறுத்து வருவதும், காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி திராவிடர் கழகம் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், பகுத்தறிவு தமிழின உரிமை மற்றும் கருத்துரிமை ஆகியவற்றின் பெயரால் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதியை ரத்து செய்தது போக தற்போது ஜாதித் தீண்டாமைக்கு எதிரான பெரியார் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் நடத்தக்கூட காவல்துறை சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி சில பகுதிகளில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கிறது. சுவரொட்டிகள் ஒட்டி மறைக்கப்படுகின்றன. இந்த எதேச்சாதிகார செயலினை கருத்துரிமையை மறுக்கும் செயலாகத்தான் நாம் பார்க்க வேண்டும்.

1942இல் காங்கிரசார் நடத்திய ‘ஆகஸ்டு புரட்சி’ அல்லது ‘வெள்ளையனே வெளியேறு’ என்று கூறி கலவரத்தில் ஈடுபட்டபோது அந்தப் போராட்டம் நடைபெறுவதற்கு முன்பாக மேற்படி போராட்டத்தினை விளக்கி காந்தியார் பேசுவதற்காக வெள்ளை அரசு ஒரு ரயிலினைத் தந்து ஊர் ஊராக பிரச்சாரம் செய்ய அனுமதித்தது. ஆனால், சுதந்திரம் வந்ததாகச் சொன்ன பிறகு, காங்கிரஸ் அரசு பேசுவதற்கும், எழுதுவதற்கும் ஏன் நாடகம் போடுவதற்குக் கூட தடை போட்டது. உதாரணம் ‘நடிகவேள்’ எம்.ஆர்.இராதா நாடகங்களைத் தடுக்க போடப்பட்ட சட்டம். தேசிய பாதுகாப்புச் சட்டம் என்ற ஓர் அடக்குமுறைச் சட்டத்தினை இயற்றி, இதில் அந்நாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கலைஞர் கருணாநிதியை 1965இல் பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு கைது செய்து பாளையங்கோட்டை சிறையிலடைத்தது. அதன் தாக்கம் அடுத்த தேர்தலில் எதிரொலித்தது.

1999ஆம் ஆண்டில் பழ.நெடுமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தில், புலிகளுக்கெதிரான தடையினை ரத்து செய்ய வலியுறுத்தி பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து போடப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.ஆர்.ஜெயசிம்மபாபு. முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பினை அளித்தார் (1999 (1) லி.கீ. (சிஸிமி) பக்கம் 73) மேற்படி தீர்ப்பில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளான ரங்கராஜன் எதிர் பி.ஜெகஜீவன்ராம் (1989 (2) ஷிசிசி 574) என்ற வழக்கினையும் பிவீனீனீணீtறீணீறீ ரி. ஷிலீணீலீ எதிர் காவல் ஆணையர், அகமதாபாத் (கிமிஸி 1973 ஷிசி 87) என்ற வழக்கையும் சுட்டிக்காட்டி போலீசாருக்கு இருக்கக்கூடிய அதிகாரம் ஒழுங்கு முறைப்படுத்துவதற்கான அதிகாரம்தான் என்றும், காலனி ஆதிக்க ஆங்கில அரசு இயற்றிய போலீஸ் சட்டத்தின்படி நடவடிக்கை எடுப்பது என்பது அரசியல் சட்டம் உறுப்பு 19(1)(ணீ)இல் அளித்துள்ள உரிமையினை மீறும் செயல். மேலும் ஜனநாயக நாட்டில் கருத்து சுதந்திரத்தினை வெளிப்படுத்துவதற்கான உரிமையினை அனுமதிப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் கடமை என்றும், வேண்டுமானால், அடிப்படை உரிமையான கருத்துரிமையினை மனுதாரர் வெளிப்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதிப்பதற்கு தடையேதும் இல்லை என்றும் கூறினார். அந்தத் தீர்ப்பின் அடிப்படையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

ஆட்சிகள் மாறினாலும் அதன் காட்சிகள் மாறவில்லை என்பதற்கு உதாரணமாக பல இடங்களில் கழகத் தோழர்கள் நடத்த இருந்த பொதுக்கூட்டங்களுக்கும், தீமிதி மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் ஆகிய நிகழ்ச்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

2004ஆம் வருடத்தில் ஜெயலலிதா ஆட்சியில் மன்னார்குடியில் காஞ்சி சங்கராச்சாரியார் கைது பற்றி விளக்கப் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கேட்டபோது, காவல்துறை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தபோது சென்னை உயர்நீதிமன்றம் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கிய அதே நேரத்தில் சங்கராச்சாரி கைது பற்றி பேசக் கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி அளித்தது. அதை எதிர்த்துத் தொடர்ந்த அப்பீல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் என்.வி.பாலசுப்ரமணியம் அடங்கிய அமர்வு சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருந்தால் காவல்துறையினர் தாராளமாக பொதுக் கூட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்யலாம் என்று தீர்ப்பளித்தது (2004 (5) சிஜிசி 554) இந்த தீர்ப்பு வந்தவுடன் போலீசாருக்கு மிகுந்த கொண்டாட்டமாகிவிட்டது.

பொதுவாக அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள பேச்சுரிமை போன்றவைகள் அடிப்படை உரிமைகள் பகுதியில் “உரிமைகள் பாதுகாப்பு’’ என்ற தலைப்பில் உள்ள உறுப்புகள் 19 முதல் 22 வரையறைகள்.

(அ)       பேச்சுரிமை மற்றும் (கருத்துகளை) வெளியிடும் உரிமை

(ஆ)      அமைதியாக, ஆயுதமின்றிக் கூடும் உரிமை

(இ)       சங்கங்கள் அல்லது யூனியன்கள் அமைக்கும் உரிமை

(ஈ)        இந்திய நிலப்பகுதி எங்கும் சுதந்தரமாக நடமாடும் உரிமை

(உ)       இந்தியாவின் எந்த நிலப்பகுதியிலும் வசிக்கக் குடியேறுவதற்கான உரிமை

(ஊ)      எத்தொழிலையும் புரிய, அல்லது எந்தவொரு வேலை, வாணிபம் அல்லது வணிகம் நடத்துவதற்கான உரிமை.

மேற்கண்ட உரிமை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட உரிமையாக உறுப்பு 19(2)இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களுடனான வரையறைகள்

1.            இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு

2.            நாட்டின் பாதுகாப்பு

3.            வெளிநாடுகளுடனான நட்புறவு

4.            பொது ஒழுங்குமுறை

5.            மதிப்புடைமை அல்லது ஒழுக்கநெறி

6.            நீதிமன்ற அவமதிப்பு

7.            அவதூறு

8.            குற்றம் புரிய தூண்டுதல்

மேற்படி வரையறைகள் சட்டம் மற்றும் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி பொது அமைதி, ஒழுக்கப் பண்பு, ஒழுக்க நீதி போன்றவற்றின் அடிப்படையில் வரையறை செய்யப்பட்டு இருக்கின்றது. ‘ஒரே ஒரு கிராமத்திலே’ என்கின்ற திரைப்படம் இடஒதுக்கீட்டிற்கு எதிராக அமைந்திருந்தது. அந்த படத்தினைத் தடை செய்து அரசு உத்தரவிட்டது. அதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்துரிமையை எந்த வடிவிலும் தடை செய்ய முடியாது என கூறியது (ஷி. ஸிணீரீணீக்ஷீணீழீணீஸீ ஸ்s ழீணீரீணீழீமீமீஸ்ணீஸீக்ஷீணீனீ 1989 (2) ஷிசிசி 574).

இதேபோல ‘டாவின்சிகோட்’ என்ற திரைப்படம் கிருஸ்துவர்களின் உணர்வுகளை, மத உணர்வுகளை புண்படுவதாகக் கூறி அரசு அந்த படத்தைத் திரையிடக் கூடாது என்று கூறியது. அதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்துரிமை அடிப்படையில் ஒரு திரைப்படத்தினைத் தடை செய்ய முடியாது என்று உத்தரவிட்டது.

பெருமாள் முருகன் என்கின்ற நாவல் ஆசிரியர் எழுதிய ‘மாதொருபாகன்’ என்கின்ற நூலைத் தடை செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து படைப்பாளரின் எந்த ஒரு படைப்பினையும் தடை செய்வதற்கு ஆட்சியாளர்களுக்கு அதிகாரம் இல்லை என்று கூறியது. ஏற்கனவே எந்த நூலையும் எழுதபோவதில்லை என்று அறிவித்திருந்த பெருமாள் முருகனை மீண்டும் எழுத வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. பல்வேறு தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டி எழுதப்பட்ட அந்தத் தீர்ப்பில், பேச்சு சுதந்திரம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்றும், படைப்பாளிகளுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறுத்தியது.

சமீபத்தில் உச்சநீதிமன்றம் (05.09.2018) என்.ராதாகிருஷ்ணன் வழக்கில் நாகரிகமான சமுதாயத்தில் ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்புகளை வெளியிடுவதற்கு உரிமை உண்டு என்றும் ‘மாத்ரு பூமி’ என்ற பத்திரிகையில் மீஷா என்கின்ற தலைப்பில் எழுதிய கட்டுரையைத் தடை செய்ய வேண்டும் என்று எழுப்பப்பட்ட கோரிக்கையினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

ஆனாலும்கூட. தமிழக காவல்துறை எதைப் பற்றியும் கவலைப்படாமல் கருத்துரிமைக்கு எதிரான போக்கையே கடைபிடித்து வருகிறது. பொதுவாக ஆட்சிக்கு வருவதற்கு முன்புவரை கருத்துரிமை பற்றி காது கிழியப் பேசும் இந்த கட்சியினர், தற்போது கருத்துரிமைக்கு எதிராக களம் காண்பது அண்ணாவின் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு எதிரானது. ஆமாம், அண்ணா யார் என்று கேட்கிறீர்களா? அவர் பெயரைத்தான் எம்.ஜி.ஆர் தனது கட்சிக்கு வைத்ததாகச் சொல்வார்கள்.

யாராவது இந்த ஆட்சியாளர்களுக்கு அண்ணாவை ஞாபகப்படுத்துங்களேன் ப்ளீஸ்.      

– வழக்குரைஞர் சு. குமாரதேவன்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *