வள்ளலார்

‘வள்ளலார்’ என்று உள்ளம் உருக ஏற்றிப்  போற்றப்படும் வடலூர் இராமலிங்க அடிகளார்  1823இல் அக்டோபர் 5 அன்று கடலூர் மாவட்டம், மருதூரில் பிறந்தவர். தொடக்கத்தில் திருவொற்றியூர் சிவன்மீதும், கந்தக் கோட்டம் முருகன்மீதும், சிதம்பரம் நடராசன் மீதும் பாமாலை சூட்டிய -_ சராசரி பக்தராக இருந்த இராமலிங்க அடிகள், பார்ப்பனீயத்தின் சூதுகளை, புனை சுருட்டுகளை, மோசடிகளைக் கண்டு _ அவற்றினின்று முற்றாக விலகி ஆன்மீகவாதிகளுக்குத் தனிப் பாதை காட்டினார். உருவ வழிபாட்டை மெச்சிப் பாடிய அடிகள் காலத்தால் முதிர்ச்சி […]

மேலும்....

கருத்துரிமையை நசுக்கும் அரசுகளின் சட்டங்கள்

திராவிடர் இயக்கத்தின் மேடைகள், என் தம்பிமார்களால் மாலை நேரத்து கல்லூரி வகுப்புகளாக மாறி வருகிறது என்று குதூகலமாக சொன்னவர் பேரறிஞர் அண்ணா. ஆனால், அதற்கான வாய்ப்பினை சமீபகாலமாக அ.தி.மு.க அரசு மறுத்து வருவதும், காவல்துறை அதிகாரிகள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி திராவிடர் கழகம் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பதும், பகுத்தறிவு தமிழின உரிமை மற்றும் கருத்துரிமை ஆகியவற்றின் பெயரால் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதியை ரத்து செய்தது போக தற்போது ஜாதித் தீண்டாமைக்கு […]

மேலும்....

‘உரிமை காவலர்’

கான்சிராம் பகுஜன் சமாஜ் கட்சியைத் தோற்றுவித்த கான்சிராம் வடநாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராய் விளங்கியவர். மத்திய அரசில் பணி புரிந்த இவர் அரசுப் பதவியை உதறித் தள்ளிவிட்டு, 1981ஆம் ஆண்டில் சோஷித் சமாஜ் சங்கர்ஸ் ஸமிதி என்னும் ஓர் அமைப்பைத் தொடங்கினார். அதுதான் பிற்காலத்தில் பகுஜன் சமாஜ் கட்சியாகப் பரிணாமம் பெற்றது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்கள்தான் இந்நாட்டின் பெரும்பான்மையான வெகு மக்கள்! அவர்களின் கைகளில்தான் நாட்டின் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டும் என்பதுதான் அதன் […]

மேலும்....

தந்தை பெரியாரின் 140 ஆவது பிறந்த நாள் பெருவிழா காட்சிகளும், மாட்சிகளூம்!

நமது அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 140ஆவது பிறந்த நாள் பெருவிழா எதிரிகள் திகைத்து திணர தமிழகமெங்கிலும், இந்தியா முழுவதும், உலக அளவில் பல்வேறு நாட்டு மக்களாலும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், திராவிடர் கழகத்தின் சார்பில் 17.9.2018 அன்று சென்னை வேப்பேரி பெரியார் திடலில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் கொண்டாடப்பட்டது. பெரியார் திடலில் அதிகாலையிலிருந்தே கருஞ்சட்டைத் தோழர்கள் அணியணியாய்த் திரண்டனர். பெருமகிழ்ச்சியோடு பெருந்திரளாகக் கூடிய பெரியார் பற்றாளர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் […]

மேலும்....

அதிகம் பாதிப்பது பெண்களே!

“டி.வி சீரியல்களால், பெண்கள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். சீரியல் இயக்குநர்களை பொறுத்தவரை, ஒரு கதையை அவர்கள் இயக்குகின்றனர். ஆனால், அந்தக் கதையில் வரும் கதாபாத்திரங்களைப் பெண்கள் பார்க்கும்போது, அதைக் கதையாக பெண்கள் எடுத்துக் கொள்வதில்லை; தன் நிஜ வாழ்வில் நடக்கும் சம்பவமாகவே எடுத்துக் கொள்கின்றனர். அதிலும் குறிப்பாக, வேலைக்குப் போகும் பெண்களைவிட, வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளே அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில், வேலைக்குப் போகும் பெண்களுக்கு, தங்களுடைய வாழ்க்கை நிகழ்வுகளை, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நேரமும், அவகாசமும் கிடைக்கிறது. ஆனால், […]

மேலும்....