திரை பார்வை

மனுசங்கடா   பெயரே நெஞ்சைப் பிசைகிறதே? மனுசங்கடா என்று எதற்குச் சொல்ல வேண்டும்? எல்லோரும் மனிதர்களாகவே இருப்பதால் இதை யாரிடம் சொல்வது? அதற்கான தேவை என்ன? ஒருவேளை வேற்றுகிரக மனிதனாக இருந்தால் அவனுக்கு நம்மை அறிமுகம் செய்விக்க நேரலாம். சக மனிதனிடமே எதற்காக நான் ‘மனுசங்கடா’ என்று சொல்ல வேண்டும். இப்படி சிந்திப்பதற்குக்கூட நமக்கு யோக்கியதை இல்லாமல் ஆக்கி வைத்திருக்கிறதே இந்த அர்த்….தமுள்ள இந்து மதம்? அப்படிப்பட்ட அர்த்தமுள்ள இந்துமதத்தின் வேரை (ஜாதியை) வெட்ட முயற்சித்திருக்கிறது இந்த […]

மேலும்....

விடுதலை ஏட்டின் ஏற்பாட்டில் பத்திரிகை சுதந்திரப் பாதுகாப்புக் – பாராட்டும்!

‘நக்கீரன்’ ஆசிரியர் கோபால் அவர்கள்மீதும், நக்கீரனில் பணியாற்றுவோர் 35 பேர் மீதும்  எந்த முக்கிய பிரச்சனைகளுக்கும் வாய் திறக்காத தமிழ்நாட்டின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களின் தனிச் செயலாளர் மூலமாக மாநகர காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதன் பேரில் சென்னை மாநகரகாவல் துறை சென்னை விமான நிலையத்தில் வைத்து நக்கீரன் கோபால் அவர்களை கைது செய்தது. இந்நிகழ்வை கண்டித்து சென்னை பெரியார் திடலில் 11-.10.-2018 அன்று மாலை 84 ஆண்டு வரலாறு படைத்த விடுதலை’ ஏட்டின் சார்பில் […]

மேலும்....

பெண்ணால் முடியும்!

ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற கிராமத்து ஏழைப் பெண்! கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுநிலைச் சமூகப் பணி முதலாமாண்டு படிக்கும் அந்தோணியம்மாள், தமிழர்களின்  மரபார்ந்த விளையாட்டுகளில் ஒன்றாகக்  கருதப்படும் கபடிமீது ஆர்வம்கொண்டவர். தேசிய மற்றும் ஆசியப் போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் அந்தோணியம்மாள், புரோ கபடியில் இடம்பெறும் உத்வேகத்துடன்  கடலூர் சில்வர் கடற்கரையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அந்தோணியம்மாளின் சொந்த  ஊர் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள சோழபாண்டிபுரம் என்ற சிறு கிராமம். அப்பா சவரிமுத்து, பால் […]

மேலும்....

சுயமரியாதை சுடரொளி என்.ஜீவரத்தினம்

சென்னை மாவட்டத்தில் திராவிடர் கழக வளர்ச்சிக்கு அரும்பாடுபட்ட வீரர்களில் ஒருவரான ஜீவரத்தினம் அவர்கள் 11.11.1911இல் சென்னையில் பிறந்து தந்தை பெரியார் வழியைப் பின்பற்றி சுயமரியாதை இயக்கப் பணிகளில் ஈடுபட்டார். முதலாம் இந்தி மறுப்பு அறப்போர் நடத்தப்பட்ட காலத்தில் போருக்குப் படைவீரர்கள் திரட்டித் தருவதில் இவருக்கு நல்ல பங்குண்டு. பெல்லாரிச் சிறையிலிருந்து விடுதலை பெற்றுத் திரும்பிய தமிழினத் தலைவருக்கு இராயபுரத்தில் இவரால் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு விழா நெஞ்சைத் தொடும் நிகழ்ச்சி! இயக்கத்தில் 1948இல் நடைபெற்ற இரண்டாம் கட்ட […]

மேலும்....

சிசுக் கொலை

பசுக் கொலைக்கு பதறும் நாட்டில் சிசுக்கொலைப் பற்றி சிந்தனை யில்லை!   பள்ளி அறையில் படுக்கும் முன்னே பகுத்து அறியா பாமர மூடர்;   கள்ளிச் செடியில் கரந்த பாலை கையில் ஏந்துதல் கயமை யன்றோ!   கட்டிலில் சாயும்முன் கணக்கிட மறந்த பட்டிணத்து வாசியோ கருவியால் கண்டு கருவிலே கலைக்கிறான்!   உருவில் ஒழியுதொன்று! கருவில் கரையுதொன்று! பெற்ற பிள்ளையை பேண இயலாதவர் பெற்றுத் தொலைப்பது ஏன்?   பெண் பிள்ளையே வேண்டாம் என்றால் பெண்டாட்டி […]

மேலும்....