கவிதை

பொங்கல் நாள் உறுதி ஏற்போம்! -முனைவர் கடவூர் மணிமாறன் பூந்தமிழர் எல்லாரும் உணர்வு பொங்கப் பூரிப்பாய்க் கொண்டாடும் திருநாள் பொங்கல்! ஏந்துபுகழ் வரலாற்றை நினைவு கூர்ந்தே ஏற்றத்தை விழைகின்ற இனிய நாளாம்! தீந்தமிழை மரபார்ந்த தமிழி னத்தின் தேன்கனவை நெஞ்சத்தில் தேக்கும் நாளில் மாந்தநேய நல்லுணர்வால் என்றும் வாழ்வில் மகிழ்ச்சியெலாம் வலம்வரவே உறுதி ஏற்போம்! தரணியெலாம் போற்றுகிற தமிழர் மாண்போ தனிச்சிறப்பாம்! செய்ந்நன்றி மறவாப் பண்பால் உரத்தநறுஞ் சிந்தனையால் உறவால் நட்பால் ஒப்பரிய கவின்கலையால் புதுமை நோக்கால் […]

மேலும்....

கவிதை : கருத்தாளர் பெரியாரின் கண்ணின்மணி வாழ்க!

‘பெரியார் பேருரையாளர்’ அ. இறையன் வரலாறு காணாத விறலேறு பெரியாரின் வழிவந்த வீர மணியே! தரமார்ந்த புடமிட்ட தங்கமாய் உருப்பெற்ற தரணிபுகழ் சூழும் மணியே! அரவமெனச் சீறிவரும் ஆரியரின் படைநோக்கி அறைகூவும் ஆற்றல் மணியே! உரமாகி நீராகி உயரறிவுச் சோலையை உண்டாக்க உஞற்றும் மணியே! உய்வறியாத் தமிழர்தமை உய்விக்கும் ஒருகொள்கை உளங்கொண்ட உறுதி மணியே! மெய்நோத லுற்றாலும் மென்நகையால் அதைவென்று மேன்மேலும் ஒளிரும் மணியே! செய்யாமற் சொல்லுவோர் செறிகின்ற திருநாட்டில் செயலான்ற சீர்த்தி மணியே! அய்யாவின் மெய்யியலை […]

மேலும்....

கவிதை: திராவிட ஒளிச்சுடர்

தீந்தமிழ்போல் வாழ்க! முனைவர் கடவூர் மணிமாறன் அய்யா பெரியார் செதுக்கிய சிற்பம் மெய்யாய்த் தமிழர் மேன்மைக் குழைப்பவர்! அருங்குணச் சான்றோர்; ஆற்றல் சுரங்கம்; பெருமைக் குரிய தமிழர் தலைவர் பெயருக் கேற்ப வீரம் மிக்கவர்! அயர்வே இல்லா அஞ்சா நெஞ்சினர்; ஓடும் குருதியில் உணர்வில் செயலில் பீடுறு திராவிடம் பிறங்கும் ஒளிச்சுடர்! பெரியார் பள்ளியில் பிழையறப் பயின்றவர் அரிய திறமெலாம் அவரிடம் கற்றவர்; சட்டம் பயின்றவர்; சால்பு மிக்கவர்; பெட்புற மனத்தில் பெரியார் கொள்கை இருத்திய அரிமா; […]

மேலும்....

கவிதை :அயல்மொழித் திணிப்பு ஆணவ உச்சம்!

முனைவர் கடவூர் மணிமாறன் இந்தியைத் திணிக்கத் துடிக்கின்றார் – மக்களை ஏய்த்தே நாளும் நடிக்கின்றார்! மந்தியை மானெனப் புகழ்கின்றார் பிறர் மனத்தை வருத்தி இகழ்கின்றார்! ஆங்கிலம் அகற்றிட விழைகின்றார் – இந்தியை அந்த இடத்தில் நுழைக்கின்றார்! தீங்கின் உருவாய்த் திகழ்கின்றார் – அறிவுத் தெளிவை இழந்தே மகிழ்கின்றார்! அரசியல் அமைப்புச் சட்டத்தின் – பல ஆணி வேரைப் பிடுங்குகிறார்; கரவை நெஞ்சில் சுமப்போரால் – மக்கள் கண்ணீர் சிந்தி நடுங்குகிறார்! உலகின் மூத்த முதன்மொழியாம் – நந்தம் […]

மேலும்....

கவிதை : அதிகார வல்லாண்ம நொறுங்கி வீழும்!

முனைவர் கடவூர் மணிமாறன் வடமொழியாம் சமற்கிருதம் பேசு வோர்கள் வாழ்கின்ற தனிநாடும் உண்டா? என்றும் முடமாகி மூடநெறி அவிழ்த்தே நாளும் முடங்கிப்போய்க் கிடக்கின்ற அதனை இந்நாள் விடம் கொண்ட பாம்பொன்றை வீட்டின் உள்ளே விடுவார்போல் புதுக்கல்விக் கொள்கை என்றே இடம்பார்த்து நுழைக்கின்ற ஆரியத்தார் ஏமாற்று வேலைகளை அறிவோம் நாமே! மதவெறியைப் பரப்புகிறார்; மாந்தர்க் குள்ளே மனக்கசப்பை, வேற்றுமையை மாண்பை மாய்க்கும் உதவாத சட்டங்கள் இயற்று கின்றார் உயர்சாதி இழிசாதி என்று சொல்லும் பதரனைய வருணத்தை அரிசி என்றே […]

மேலும்....