கவிதை : நரியாரை நடுங்கச் செய்த பெரியார்!

முனைவர் கடவூர் மணிமாறன் பெரியார்க் கெல்லாம் பெரியார் இவரே! நரியார் கூட்டம் நடுங்கச் செய்த அரிமா இவரே! ஆளுமை மிக்க பெரியார் உழைப்பால் பிழைத்தோம்; மீண்டோம்; வல்லிருள் மாய்த்த வைக்கம் மறவர்; நல்லோர் எல்லாம் நாளும் வணங்கும் தலைவர் இவரே! அறிஞர் அண்ணா கலைஞர் போன்றோர் கடமையாற்றிட முன்னேர் பூட்டி முனைப்பாய் உழுதவர்! பன்னருஞ் சீர்த்திப் பண்பின் இமயம்; பகுத்தறி வென்னும் பாதை காட்டி மிகவும் தெளிவாய் மீட்சி விழைந்தவர்; சுயமரி யாதை இயக்கத் தாலே நயமுறு […]

மேலும்....

கவிதை : பெரியார் பிறந்த நாளில் உறுதி ஏற்போம்!

முனைவர் கடவூர் மணிமாறன் பகுத்தறிவின் உயர்மாண்பைப் பரப்பி வந்த பகலவனே நம் பெரியார்; புரிநூல் கூட்டம் வகுத்துரைத்த மனுதரும் வேத நஞ்சோ வண்டமிழர் வளவாழ்வை அழிக்கும் என்றே மிகத்தெளிவாய் எடுத்துரைத்தார்; தமிழி னத்தார் மேன்மைக்குக் குரல்தந்தார்; மகளிர் எல்லாம் அகங்குளிரச் சொத்துரிமை கிடைக்கச் செய்த அய்யாவின் அடிச்சுவட்டில் செல்வோம்; வெல்வோம்! சாதிமதப் புரட்டுகளை ஏற்க வேண்டா! சாத்திரங்கள் என்பதெலாம் சழக்கர் செய்த நீதியற்ற சூழ்ச்சியென்றார்; ஆரியத்தைத் தீண்டவரும் நச்சுப்பாம் பென்றார்! நம்மை மோதிடவும் மிதித்திடவும் முனைந்தோர் தம்மின் […]

மேலும்....

கவிதை : மனிதம் எங்கே?

முனைவர் கடவூர் மணிமாறன் அரசியலில் வாழ்வியலில் இன்றும் நம்மை ஆள்வதுவும் ஆரியமே, அறிந்து கொள்வீர்; அறிவியலை உலகியலை அறியா ராக அழிக்கின்ற மடமையெனும் சேற்றுள் மூழ்கிப் புரியாமல் பகுத்தறிவை இழந்தோம்; பொல்லாப் பொய்களையே மெய்களென நம்பிக் கெட்டே உரமிழந்தோம்; திறமிழந்தோம்; பழமை வாத ஊளையிடும் நரிகளையும் நம்ப லாமோ? சாணிக்குப் பொட்டிட்டுச் சாமி என்போர் சாத்திரமும் கோத்திரமும் வேண்டும் என்பார்! ஆணியையும் வைரமென அலறி நிற்பார்; அழிக்கின்ற மனுதருமம் வேதம் என்பார்; தூணினையே துரும்பென்பார்; துரும்பைக் கூடத் […]

மேலும்....

கவிதை : திராவிடரும் ஆரியரும்!

முனைவர் கடவூர் மணிமாறன் திண்ணிய மனமும், மரபும் தெளிந்தநல் லறிவும் மிக்கார்! தொன்மொழி தமிழைக் காக்கும் தொண்டறம் தோய்வார்; தமிழர் நன்னெறி மரபை, மாண்பைப் பொன்னெனப் போற்றிக் காப்பர் மன்பதை உய்ய உயர நாளுமே உழைப்போர் திராவிடர்! ஆரியர் நஞ்சை நெஞ்சில் அமிழ்தென ஏற்கும் தீயர் வீரியம் இழந்த போதும் வெந்துயர் இழைப்பர்: நம்மோர் வேரினைப் பறிக்க எண்ணும் வெஞ்சினம், கயமை மிக்கார்; சீரினை அழிக்க எண்ணும் சிறுமதி படைத்தோர் ஆவர்! முடக்கிடுவர் நம் பகுத்தறிவை முழுநெஞ்சும் […]

மேலும்....

கவிதை : வெற்றி காண்போம்!

– முனைவர் கடவூர் மணிமாறன் சட்டத்தின் நல்லாட்சி நடக்க வில்லை ‘சனாதன தருமத்தின்’ ஆட்சி இங்கே திட்டமிட்டு நடக்கிறது! நாட்டு மக்கள் திகைக்கின்றார்! ஆளுநரின் சொற்கள் யாவும் கட்டவிழ்க்கும் வன்முறையை! விலங்குக் கூட்டம் கண்டபடி உளறுவதை நிறுத்தல் வேண்டும்! நட்டநடுத் தெருவினிலே ஆடை யில்லா நங்கையினை அழகியென் நவில்வா ருண்டோ? வேலையில்லாத் திண்டாட்டம் நாட்டில் எங்கும்; வெறுப்புணர்வில் புழுங்குகிறார் இளைஞர் எல்லாம்; பாலைவனம் போல்நாட்டை ஆக்கு தற்கே பகலிரவாய்ச் சிந்திக்கும் பதர்கள் நாட்டைச் சோலையென ஆக்குவதாய் ஏய்த்து […]

மேலும்....