எண்ணம்

ஜூலை 16-31

மாலை ஆறு மணிக்கு மேல் தலையை விரித்துப் போடக் கூடாது என்று எண்ணும் ஃபேமிலியில் இருந்து வந்தவள் நான். ஆனால், யுத்தம் செய் படத்துக்காக மொட்டை அடித்தேன். அதனால் என்ன ஆனது? ஒரு காலத்தில் தாலி என்றால் புனிதம் என்று நினைத்தேன். ஆனால் அந்த மதிப்பு இப்போது இல்லை. கழுத்தில் தாலி ஆபரணம் என்ற அளவில் மட்டுமே இருக்கிறது. நான் நடிக்கும் கேரக்டரில் தாலி இருக்கக்கூடாது என்றால், தாலியைக் கழற்றத்தான் வேண்டும். உண்மையான அன்பு மனத்தில் இருக்கும் போது இதெல்லாம் தேவையில்லாத சென்டிமெண்ட்.
_ நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன்

குடியரசுத் தலைவர் பதவி முக்கியத்துவமும் பொறுப்பும் வாய்ந்தது. இந்தியாவில் பல்வேறு மொழிகளையும், மதங்களையும், கலாச்சாரங்களையும், இனங்களை யும் கொண்ட பன்முகத் தன்மை யையும் ஜனநா யகம், சட்டத்தின் ஆட்சி, சுதந்திரம், வாய்ப்புகள் சமமாகக் கிடைத்தல், மதச்சார்பின்மை ஆகியவை நமது விடுதலைப் போராட்டத்தின் அடிப்படை உணர்வுகளாகும்; நமது அரசியல் சட்டத்தின் அடிப்படை உணர்வுகளாகும். எனவே, அவற்றையும் உயர்த்திப் பிடிக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.   _ -குடியரசுத் தலைவர் பதவி வேட்பாளர் பிரணாப் முகர்ஜி

இப்போது தொழில் நிறுவனங் கள் கூட பள்ளிகளைத் திறந்து வருகின்றன. ஏ.சி. வகுப்பறைகள், ஏ.சி.பள்ளி வாகனங்களுடன் கூடிய தனியார் பள்ளிகள் அதிகமாக வந்து கொண்டிருக் கின்றன. இதுபோன்ற பெரிய பள்ளிகளில் படிக்கும் குழந்தை களையும், உணவுக்கே வழியில்லாமல் படிக்கும் குழந்தைகளையும் தகுதி என்ற ஒரே அளவுகோலில் எப்படிப் பார்க்க முடியும்? தனியார் பள்ளிகளைத் தொடங்குவதற்கு கல்வியாளராக இருக்கவேண்டிய அவசியம் இல்லை; வங்கியில் பணம் இருந்தால் போதும் என்ற நிலை உள்ளது. பள்ளிகளைத் தொடங்கவோ, அதை நடத்தவோ எந்தவித அடிப்படைத் தகுதியும் தேவையில்லை என்றாகிவிட்டது. தொழில் தொடங்குவதையும் கல்விக் கண் திறப்பதையும் ஒரே தளத்தில் பார்க்கக்கூடாது. அது மிகப் பெரிய தவறு. கல்வி வழங்குவது தொழில் அல்ல; அது சேவை.
_ உச்சநீதிமன்ற மேனாள் நீதிபதி ஏ.கே.கங்குலி

 

உங்கள் நாட்டில், நீர் உபரியாக கிடைக்கிறது. அதனால், நீரின் மகத்துவம் உங்களுக்குப் புரியவில்லை. நீரைக்கெடுத்து நிலத்தைக் கெடுத்து, உணவைக்கெடுத்து, உயிரினங்களின் உடலையும் கெடுத்துக்கொண்டு இருக்கிறீர்கள். – குறைந்த நீரில் விவசாயப் புரட்சி செய்துள்ள இஸ்ரேல்  விவசாயி ஈட்டன்.

உலகம் பயன்படுத்தும் ஒட்டுமொத்த ஆற்றலைவிட பத்து மடங்கு அதிக ஆற்றல், சூரிய ஒளியால் வெளிப்படுத்தப்படுகிறது. இந்த ஆற்றலை, சூரிய சக்தி மின் உற்பத்தில் நிலையத்தை விண்வெளியில் அமைப்பதன் மூலம் நாம் பெறமுடியும். இந் நிலையத்துக்கான பொருட்களை விண்வெளிக்குக் கொண்டு செல்ல ஒரு கிலோவுக்கு 20 ஆயிரம் டாலர் செலவிடும் நிலை உள்ளது. இதை 2 ஆயிரம் டாலராகக் குறைக்கவேண்டும் என்பதே எனது திட்டம்.

– -இந்தியக் குடியரசு மேனாள் தலைவர் ஆ.ப.ஜெ.அப்துல் கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *