நிகழ்ந்தவை

ஜூலை 16-31

  • ஊழல் வழக்கில் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டுள்ளதால் இமாச்சலப் பிரதேசத்த்தின் முன்னாள் முதலமைச்சரும்  மத்திய அமைச்சருமான வீரபத்ர சிங் ஜூன் 26 அன்று பதவி விலகினார்.
  • இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜியும், தேசிய ஜனநாய கூட்டணி சார்பில் பி.ஏ.சங்மாவும் ஜூன் 28 அன்று வேட்புமனு தாக்கால் செய்தனர்.
  • ஜூன் 28 அன்று மதியம் 2 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலத்தில் மாநகரப் பேருந்து கவிழ்ந்து 40 பேர் காயமடைந்தனர். இது அண்ணா மேம்பாலத்தில் நிகழ்ந்த முதல் விபத்து.
  • பாகிஸ்தானில் உளவு பார்த்ததாக 1980 ல் கைது செய்யப்பட்டு 31 ஆண்டுகள் சிறையில் இருந்த சுர்ஜித் சிங் ஜூன் 27 அன்று விடுதலை செய்யப்பட்டு ஜூன் 28 ல் இந்தியா வந்தார்.
  • பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததைத் தொடர்ந்து, பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 அளவுக்கு ஜூன் 29 முதல் குறைக்கப்பட்டது.
  • கருநாடக பா.ஜ.க.அரசின் 10 அமைச்சர்கள் எடியூரப்பாவுக்கு ஆதரவாக ஜூன் 29 அன்று பதவி விலகினர்.
  • மத்திய கல்வி வாரிய நூலில் இடம் பெற்றிருந்த அம்பேதகர் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் குறித்த கேலிப்படங்களை நீக்கி ஜூன் 29 அன்று மத்திய மனித வள அமைச்சர் கபில் சிபல் ஆணையிட்டார்.

  • உலக வங்கியின் 12 ஆவது தலைவராக அமெரிக்காவைச் சேர்ந்த தென்கொரியரான ஜிம்யோம்கிம் ஜூலை 1 அன்று பொறுப்பேற்றார்.
  • சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில்  திருமண நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜூலை 2 அன்று ஆணையிட்டது.

  • அ.தி.மு.க.அரசின் அடக்கு முறைகளைக் கண்டித்து தி.மு.க.வின் சிறை நிரப்பும் போராட்டம் ஜூலை 4 அன்று நடந்தது. இதுவரை இந்தியாவில் இல்லாத அளவுக்கு 2.5 இலட்சம் பேர் பங்கேற்ற இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். மு.க.ஸ்டாலின், கவிஞர் கனிமொழி உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு அன்று மாலை விடுதலை செய்யப்பட்டனர்.

  • உச்சகட்ட கோஷ்டி மோதலைத் தொடர்ந்து கர்நாடக அரசின் பா.ஜ.க.முதலமைச்சர் சதானந்த கவுடா ஜூலை 8 அன்று பதவி விலகினார். ஜூலை 11 அன்று புதிய முதலமைச்சராக ஜகதீஷ் ஷட்டர் பொறுப்பேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *