முற்றம்

முற்றம் மே 01-15

ஒளிக்காட்சி

YOUTUBE.COM/Welcome the world – London 2012

தமிழுக்கு முதல் மரியாதை

அடுத்த திங்கள் தொடங்கப்போகும் ஒலிம்பிக் போட்டிக்கு இப்போதே தயாராகிவிட்டது இலண்டன் மாநகரம்.வரவேற்பின் ஒரு அம்சமாக, உலகிலிருந்து வரும் பார்வையாளர்களை வரவேற்க ஒரு ஒளிக்காட்சியை உருவாக்கியிருக்கிறார்கள். இலண்டனில் வாழும் அனைத்து சமூக மக்களும் தத்தமது மொழியில் முதலில் வணக்கம் என்று,பின்னர் வரவேற்கிறோம் என்றும் கூறுகிறார்கள். இதில் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா? இந்த ஒளிக்காட்சி தொடங்கும் போதே முதன்முதலாக வணக்கம் கூறுவது ஒரு தமிழ்ச் சிறுவன்தான். வணக்கம்என்று அழகு தமிழில் அவன் துள்ளிக் குதித்துச் சொல்லுகிறான்.  தொடர்ந்து பலரும் வணாங்கியபின்லண்டன் மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது என்று ஒரு தமிழர் கூறுகிறார். மெல்லிய பின்னணி இசையுடன் பாடல் லண்டனைச் சுற்றிப் படமாக்கப்பட்டிருக்கிறது.
முற்றம்

நூல்: கார்ல் மார்க்சின் முதல் நூல் திறனாய்வு

உலகப் புகழ்பெற்ற கார்ல் மார்க்சின் Das Capital நூலின் 3 தமிழாக்கங்கள் குறித்த திறனாய்வு நூல். திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு, சோதிப்பிரகாசம் இணைந்து இந்நூலை எழுதியுள்ளனர். மார்க்ஸ் குறிப்பிடும் Capital என்பது இதுவரை மூலதனம் என்றே மொழியாக்கப்பட்டது.

ஆனால், இதனை முதல் என்று கூறுவதே சரி என்கிறது இந்நூல். மூன்று மொழிபெயர்ப்புகளின் நிறைகுறைகளை எடுத்து வைத்து தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்பின்போது மிகுந்த கவனம் தேவை என்பதை நூலைப் படிக்கும்போது உணர முடிகிறது. கார்ல் மார்க்சின் முதல் நூலைப் படிக்கும்முன் இந்நூலைப் படித்தால் பயன் மிகும்.

வெளியீடு: நக்கீரன் பதிப்பகம்,

1, அன்னை நாகம்மை தெரு,
மந்தைவெளி, சென்னை_28,
செல்பேசி: 98415 45516
பக்கங்கள்: 190 ரூ.150.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *