மன இறுக்கம் வேண்டும் – நம் நெருக்கம்

மே 01-15

உடல் நலிவை உரியவர் சொல்லாவிடினும் உடன் இருப்பவர்கள் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால்,மன இறுக்கத்தை (autism) உடையவர் சொன்னால் மட்டுமே மற்றவரால் அறிந்துகொள்ளமுடியும். அல்லது அவர்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனிப்பதன் மூலம் அறியவேண்டும். அதனால்தான் மன இறுக்கத்திற் கென்றே ஒரு நாளை அய்க்கிய நாடுகள் அவை உருவாக்கி அந்நாளில் மன இறுக்கம் உடையோரை எவ்வாறு பாதுகாப்பது என்பது குறித்த  விழிப்புணர்வை உருவாக்கிவருகிறது. ஆண்டுதோறும் ஏப்ரல் 2 ஆம் நாள் உலக மன இறுக்க விழிப்புணர்வு நாளாக கடந்த 5 ஆண்டுகளாகப் பேணப்படுகிறது.

மன இறுக்க கோளாறுகள், நரம்பியல் பிரச்சினைகளால் உருவாகிறது. இதனால் சமூகப் பரிமாற்றங்கள், மனிதர்களுடன் தொடர்பு கொள்வதில் சிரமங்கள், கட்டுப்படுத்தப்பட்டும், திரும்பத் திரும்ப சொன்னதையே சொல்வது, நடத்தை மாற்றங்கள் ஆகிய குறைபாடுகள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டு. இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதனைப் புரிந்து கொள்வதிலும், சமூகம் தொடர்பான சிந்தனைகளைப் புரிந்து கொள்வதிலும், அவை குரல், முக வழி தெரிவிப்பு, மற்றவர்களின் முகத்தைப் பார்க்காமலும், நடத்தை குறித்த அவர்களின் சைகைகளை கவனிக்க மாட்டார்கள்.

ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன், எமிலி டிக்கின்சன், சார்லஸ் டார்வின், அய்சக் நியூட்டன், ஜனாதன் சுவிப்ட், சிறீனிவாச ராமானுஜன், டபிள்யூ.பி. ஏட்ஸ், சார்லஸ் ரிச்டர் அடால்ப் ஹிட்லர் ஆகியோர் மன இறுக்க நோயால்பாதிக்கப்பட்டவர்கள் என்பது வியப்பான செய்தி.

நயாகரா நீர்வீழ்ச்சி, எம்பயர் மாநிலக் கட்டிடம், சிஎன் அடுக்ககம், நியூயார்க் பங்குச் சந்தை கட்டிடம் போன்ற புகழ் பெற்ற இடங்கள் உலக மறூ இறுக்க விழிப்புணர்வு நாளுக்கு தங்களுடைய பேராதரவை நீல நிற விளக்கினை ஏற்றி வைத்து தெரிவிக்கின்றன.

நீங்களும் உங்கள் ஒத்துழைப்பைக் காட்ட முடியும்.எப்படி?

உங்கள் உறவினர்களிடம், நண்பர்களிடம் இக்குறைபாடு இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் மீது எரிச்சல் படாமல் இருக்கலாம்.

குழந்தைகளுக்கு இக்குறைபாடு இருக்கலாம். ஆனால், அவர்கள் வேறு சில நல்ல திறமைகளைப் பெற்றிருப் பார்கள். அதனை ஏற்று அவர்களைக் காத்திட வேண்டும்;அவர்களின் பணிகளில் நீங்களும் பங்கேற்கலாம்.

உங்களையோ, மற்றவர் களையோ அவர்கள் புரிந்து கொள்ள முடியாத நிலையை பொறுமையுடன் கவனியுங்கள்.அவர்கள் பக்கத்தில் இருந்து அவர்கள் என்ன செய்ய விரும்பினாலும் செய்ய விடுங்கள். அவர்களும் மனிதர்கள்தானே…?

நீங்கள் ஒத்துழைத்தால் அவர்களில் இன்னொரு அய்ன்ஸ்டீன் உருவாகலாம் அல்லவா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *