பெரியார் அம்பேத்கர் உழைப்பு

மே 01-15

அம்பேத்கர் பிறந்த மாநிலத்தில் அவர் படித்த பள்ளியில்கூட அவருக்கு தண்ணீர் மறுக்கப்பட்டது. அந்த காலத்தில் அந்த அளவுக்கு ஜாதி வேற்றுமை இருந்தது. அதனால்தான் அவர் படித்து முடித்தவுடன் பொருளாதாரத்தில் பின்தங்கிய அடிதட்டு மக்களுக்காக பாடுபட்டார்.

எத்தனையோ மாற்றங்களும் வளர்ச்சியும் இரட்டை குவளை முறை இன்னும் இருக்கத்தான் செய்கிறது. தமிழகத்தின் பெரியாரின் தீவிர முயற்சியால் ஜாதி வேற்றுமை ஒரு சில கிராமங்களை தவிர முற்றிலும் ஒழிக்கப் பட்டுள்ளது.

பெரியாரின் முயற்சியால்தான் இடஒதுக்கீடு முறை தமிழகத்தில் முதன்முதலில் அமலுக்கு வந்தது. அதனால்தான் ஒடுக்கப்பட்ட பின்தங்கிய மக்கள் கல்வி கற்று பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு களை பெற்றுள்ளனர். தீண்டா மை இருக்கும் வரை அம்பேத்கர் மாதிரியான பெருமக்கள் போராடிக்கொண்டுதான் இருப்பார்கள். எவராலும் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு ஜாதி வேறுபாடுகளும், ஒடுக்குமுறைகளும் கடந்த காலத்தில் நிலவின என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்திய வரலாற்றில் அவை இருண்ட காலமாகும்.   தமிழ்நாட்டிலும், இந்தியாவின் மற்ற பகுதிகளிலும் சில கிராமங்களில், அடக்கு முறை அல்லது இரட்டைக் குவளை முறை தொடர்ந்து நிலவுகிறது; அனைத்து வழிகளிலும் இக்கொடிய மறை ஒழிக்கப்பட வேண்டும்.

– எம்.ஒய்.இக்பால், தலைமை நீதிபதி,  சென்னை உயர் நீதிமன்றம்

 

அரவிந்தரின் ஆன்மீகம்

புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தில் ஏற்கெனவே பாலியல் புகார்கள் உள்ளன. இப்போது அரவிந்தர் பற்றிய நூல் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது. தி லைவ்ஸ் ஆஃப் அரபிந்தோ என்ற அரவிந்தரின் வாழ்க்கை குறித்த நூலை அமெரிக்காவைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியர் பீட்டர் ஹீஸ் என்பவர் 2008இல் எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூலில், அரவிந்தரின் சுதந்திரப் போராட்டம் மதச்சாயத்துடன் கூடியது;  அவர் தனது உளவியல் சிக்கல்களில் இருந்து விடுபடவே ஆன்மீகத்திற்குள் நுழைந்தார்; அவருக்கும் ஸ்ரீ அன்னை என்றழைக்கப்படும் மிரா அல்ஃபசாவுக்கும் இடையிலான உறவு முற்றிலும் காமம் சாராத உறவு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது என பீட்டர் ஹீஸ் குறிப்பிட்டுள்ளார். இதனை அரவிந்தர் பக்தர்கள் எதிர்க்கின்றனர். இந்த நூலாசிரியர் பீட்டர் ஹீஸ் 30 ஆண்டுகள் அரவிந்தர் ஆசிரமத்தில் தங்கியிருந்தவர். ஆன்மீகவாதி, புரட்சி செய்தவர், துறவி என்றெல்லாம் போற்றப்பட்டவருக்கு வாழ்வில் இப்படி ஒரு முகம் இருந்ததா என நூலைப் படிப்பவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *