நிகழ்ந்தவை

மே 01-15
  • தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் சட்டம செல்லும் என ஏப்ரல் 12 அன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அன்றிலிருந்தே இச்சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்தது.
  • ஒடிசாவில் மாவோஸ்டுகளால் கடத்தப்பட்ட இத்தாலி பயணி போசாஸ்கோ ஏப்ரல் 12 அன்று விடுவிக்கப்பட்டார்.
  • இந்தியா முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடத்தப்பட்ட என்கவுண்டர்கள் குறித்த விவரங்களை மத்திய, மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்துக்கு தெரிவிக்க வேண்டும் என ஏப்ரல் 13இல் ஆணையிடப்பட்டுள்ளது.

  • காபூல் நகரில் உள்ள ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம், அமெரிக்கா, இங்கிலாந்து தூதரகங்கள் மீது தாலிபான் படையினர் ஏப்ரல் 15 அன்று தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தினார்கள்.
  • பா.ஜ.க.வின் சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 11 பேர் குழு ஏப்ரல் 16 அன்று இலங்கை சென்றது. தி.மு.க., அ.தி.மு.க. உறுப்பினர்கள் இக்குழுவில் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

  • கடந்த 6 மாதங்களில் தொடர்மின் தடையால் கோவை, திருப்பூரில் ரூ.2000 கோடி உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஏப்.17 அன்று குறுந்தொடரில் முனைவோர் சங்கம் (காட்மா) கூறியுள்ளது.

  • கண்டம் விட்டு 5 ஆயிரம் கி.மீ. தூரம் பாய்ந்து இலக்கைத் தாக்கும் அக்னி-_5 அணு ஏவுகணையை இந்தியா, ஏப்.19இல் ஒடிசா, வீலர் தீவு ஏவுதளத்திலிருந்து செலுத்திய சோதனை வெற்றி பெற்றது.
  • சென்னை, கோட்டை ராணுவக் குடியிருப்பில் சிறுவன் தில்ஷனைக் கொலை செய்த வழக்கில் முன்னாள் ராணுவ அதிகாரி ராமராஜுக்கு ஏப்.20இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

  • காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் பிறழ் சாட்சிகள் மீது நடவடிக்கை கோரும் மனுவை விசாரிக்காமலேயே வழக்கைத் தொடர்வதைத் தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சங்கரராமன் மனைவி பத்மா ஏப்.20இல் புதிய மனு தாக்கல் செய்தார்.
  • பாகிஸ்தான் தலைநகர் இசுலாமாபாத்தில் புதிய விமானம் ஏப்.20இல் தனது முதல் பயணத்திலேயே விழுந்து நொறுங்கி 127 பேர் உயிரிழந்தனர்.
  • சட்டீஸ்கர் மாநிலம் சுகுமா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் பால் மேனன் ஏப்.21இல் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்டார். இவர் நெல்லையைச் சேர்ந்தவர். ஏப்.16இல் இலங்கைக்கு சென்றிருந்த இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏப்.21இல் திரும்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *