புத்தகக் கடையான சர்ச்

ஏப்ரல் 01-15

லைவாணரின் திரைப்படம் ஒன்றில் 1950-_-60 நாடகம் என்ற ஒரு காட்சி வரும். இந்திய சுதந்திரம் பெற்ற பிறகு மக்கள் வாழ்வில் எப்படியெல்லாம் மாற்றம் வரவேண்டும் என்ற கலைவாணரின் ஆசை அந்தக் காட்சியில் இடம்பெற்றிருக்கும்.அதாவது, 1950 ல் இருக்கும் நிலை 10 ஆண்டுகளில் எப்படி மாறவேண்டும் என்பதைக் காட்சிப் படுத்தியிருப்பார். 1950 ல் பிச்சைக்காரர்கள் அம்மா… தாயே என்று வீடு வீடாகப் பிச்சை கேட்டு வருவார்கள். ஆனால், 1960ல் ஒரு பிச்சைக்காரரைக் கூடக் காணமுடியாது. அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டிருக்கும் என்பதை அதில் சுட்டியிருப்பார்.

அதன் தொடர்ச்சியாக இன்னொரு காட்சி, 1960 ல் நடப்பதாக அமைத்திருப்பார். டி.ஏ.மதுரம் அம்மையாரிடம் கோவில் ஒன்றைக் கலைவாணர் காட்டுவார். அங்கு குழந்தைகளுக்கு ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருப்பார். அதை பார்த்த மதுரம், என்னங்க இது..? கோவில்ல பள்ளிக்கூடம் நடக்குது. அப்ப சாமி எங்க? என்பார். அதோ அங்க பாரு என்று ஒரு பகுதியைக் காட்டுவார்.

அங்கு ஒரு கூண்டுக்குள் அக்கோவிலில் இருந்த சாமி சிலை வைக்கப்பட்டிருக்கும். கோவில்களையெல்லாம் பள்ளிகளாக்கவேண்டும் என்பது கலைவாணரின் சிந்தனை. அவர் கண்ட கனவு இந்தியாவில் இன்னும் நிறைவேறவில்லை. ஆனால், இது நெதர்லாந்து நாட்டில் நிறைவேறிவிட்டது.

நெதர்லாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாஸ்ட்ரிச்ட் என்ற நகரத்தில் ஒரு பழைமையான டொமினிகன் சர்ச் உள்ளது. இந்த நகரமே மிகப் பழைமையான நகரம்தான். இந்த டொமினிகன் சர்ச்சைத்தான் இப்போது புத்தகக் கடையாக மாற்றிவிட்டார்கள். கட்டடத்தின் பழைமையை மாற்றாமல் சர்ச்சை மட்டும் மாற்றிவிட்டு, நூல்களை அடுக்கடுக்காக வைத்துவிட்டார்கள்.

ஒரு பக்கம் நூல்களும் மறுபக்கம் வாடிக்கையாளர்கள் அமரும் இருக்கைகளும் போடப்பட்டு விட்டன. மெர்க் கிரோட் (விமீக்ஷீளீஜ் நிவீக்ஷீஷீபீ) என்ற கட்டக்கலை நிறுவனம் இந்த நூல் நிலையத்தை வடிவமைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *