அம்பேத்கர் பொன்மொழிகள்

ஆடுகளைத்தான் கோவில்கள் முன்பாக வெட்டுகிறார்களேயொழிய சிங்கங்களை அல்ல ஆடுகளாக இருக்க வேண்டாம் சிங்கங்களைப் போன்று வீறுகொண்டெழுங்கள். வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும், பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும், நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். எவனொருவன் தானே சரணடையாமல், மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல், எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன். நான் வணங்கும் தெய்வங்கள் மூன்று. முதல் தெய்வம் அறிவு; இரண்டாவது தெய்வம் சுயமரியாதை; […]

மேலும்....

நெசந்தானுங்க

இடஒதுக்கீடு தப்புன்னு அசிம் பிரேம்ஜியே சொல்லிட்டாரா? – பவானந்தி இட ஒதுக்கீட்டுக்கு எதிரான கருத்து என்றால் எந்த மூலையில் யார் சொல்லியிருந்தாலும் தேடிப் பிடித்துப் பரப்பி, அப்படி சொன்னதற்காகவே சொன்னவரைப் புகழ்ந்து செய்திகள் வெளியிடுவதில் பார்ப்பன, முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு தனிப் பிரியம்! இணைய தளங்களில் சொல்லவே வேண்டாம். கொஞ்சம் ஒயிட் காலர் வேலைகளுக்குப் போய்விட்ட பார்ப்பனரல்லாதார்களும் இட ஒதுக்கீடு தான் இந்தியாவைக் கெடுக்கிறது என்ற கருத்தை மூளைக்குள் ஏற்றிக் கொண்டு அதை பெருமையாகப் பேசவும் செய்வார்கள். அப்படி […]

மேலும்....

முகநூல் பேசுகிறது

பசுவோட உடம்பில் கோடானுகோடி தேவர்கள் வாழ்கிறார்கள் என்று சொல்கிறார்களே! அப்போ அந்த பசுவுக்கு கோமாரி நோயோ அல்லது ஆந்ராக்ஸ் கிருமியோ தாக்கும்போது ஏன் அந்த தேவர்கள் அந்த கிருமிகளை அழிப்பதில்லை? லூயி பாஸ்டியரோட மருந்துதானே அந்த மாடுகளை காப்பாற்றுகிறது? எனில் அந்த தேவர்களைவிட லூயி பாஸ்டியர் உயர்ந்தவரா? ஒரு வேளை மேற்படி நோய்களினால் அந்த பசுக்கள் சாக நேரிட்டால் அதன் உடலில் குடியிருக்கும் கோடானு கோடி தேவர்களும் செத்து மடிவார்களா? அல்லது இன்னொரு பசுவின் உடலில் புகுந்து […]

மேலும்....

உங்களுக்கு தெரியுமா?

1956 அக்டோபர் 15 ல் நாக்பூரில் 8 லட்சம் பேருடன் பௌத்த மார்க்கத்தைத் தழுவியபோது, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூன்றையும் கடவுளாகக் கருதி வணங்கமாட்டேன்; ராமன், கிருஷ்ணன் இரண்டும் இறைவனின் அவதாரமென எண்ணி வணங்க மாட்டேன்; கணபதி, ‘கௌரி’ மற்றும் இந்து தேவதைகளை தெய்வங்களாக ஏற்று வணங்கமாட்டேன்; கடவுள் பிறந்ததாகவோ, அவதாரம் எடுத்ததாகவோ நம்ப மாட்டேன் என்பன உள்ளிட்ட, இந்து மதத்துக்கு எதிரான 22 உறுதிமொழிகளை ஏற்றவர் அண்ணல் அம்பேத்கர் என்ற வரலாறு உங்களுக்குத்தெரியுமா?

மேலும்....