அறிஞர் அண்ணா

2022 செப்டம்பர் 1-15-2022

அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவருமே சாதித்ததில்லை. இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை. ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை – கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை – அண்ணா அவர்கள் தோற்று வித்தார் என்றால், அது சாமானிய காரியமல்ல; பிரம்மாண்டமான சாதனையாகும்!
– தந்தை பெரியார்