சுடுமூஞ்சி

– அறிஞர் அண்ணா சனியன், என்ன இன்னும் தொலைவதாகக் காணோம். மணி ஆறாகப்போகிறதே! – கணக்கப்பிள்ளை “சீக்கிரம், சீக்கிரமாகக் கட்டிமுடியம்மா மாலையை, மணி ஆறாகப்போகிறது. அந்த உருத்திராட்சப் பூனை வருகிற நேரமாகுது.” – மாலை விற்பவன் “ஒருநாள் கூடத் தவறமாட்டார். பெரிய பக்திமானல்லவோ அவர் மணி இன்னும் ஆறு ஆகவில்லையே, வந்துவிடுவார்.” – குருக்கள் “நாளைக்குப் பார்த்துக்கொள்வோம் தாளம் சரியாக வருகிறதான்னு, மணி ஆறு ஆகப்போகுது. அந்தக் கிழக்குரங்கு வருகிற நேரமாகுது.” – வேதம் “மணி ஆறா? […]

மேலும்....

சிறுகதை : பேய் ஓடிப் போச்சு… – அறிஞர் அண்ணா

அண்ணே! பூசாரி பொன்னனை நான் என்னமோன்னு எண்ணிக்கிட்டுக் கிடந்தேன். இப்பத் தெரியுது. அவன் இலேசுபட்டவனில்லைங்கற விஷயம்.’’ “என்னத்தெடாப்பா, கண்டுட்டே இப்ப?’’ “என் மவளுக்கு, கொஞ்ச நாளா, மயக்கமா இருந்தது பார் அண்ணே! மாமரத்துப் பிசாசு, பிடிச்சுகிட்டு ஆட்டி வைச்சிதேண்ணே…’’ “ஆமா! உம்மவ, செல்லாயியைத்தானே…’’ “ஆமாண்ணே! பூசாரி போட்ட மந்திரத் திலே, பேய் ஓடிப் போச்சண்ணே! இப்ப என் மவ, சவுக்கியமா, சிரிச்சிப் பேசிகிட்டுச் சிங்காரிச்சி பூ முடிச்சிக்கிட்டு இருக்கிறா. என்ன மோண்ணே! மாயம் மந்தரம் இதெல்லாம் தப்புன்னு, […]

மேலும்....

அறிஞர் அண்ணா

அண்ணா அவர்கள் சாதித்த காரியம்போல வேறு எவருமே சாதித்ததில்லை. இந்தியாவை ஆண்ட எவரும் இதுமாதிரி செய்ததில்லை. ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை – கடவுள் வேண்டாம், மதம் வேண்டாம், ஜாதி வேண்டாம், சாஸ்திரம் வேண்டாம் என்ற ஒரு கொள்கையுடைய ஒரு பகுத்தறிவு அரசாங்கத்தை – அண்ணா அவர்கள் தோற்று வித்தார் என்றால், அது சாமானிய காரியமல்ல; பிரம்மாண்டமான சாதனையாகும்! – தந்தை பெரியார்

மேலும்....