உணவே மருந்து : காலை முதல் உணவில் கவனிக்க வேண்டியவை!

நவம்பர் 1-15,2021

ஒவ்வொரு நாளும் காலை வேளையில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மிக முக்கியமானதொன்று. எத்தகைய உணவுகளை எடுத்துக் கொள்கிறோமோ, அதன் பயனாய் அன்றைய தினம் நமது வேலையும், திட்டங்களையும் சரிவரச் செய்ய முடியும். அந்த வகையில் காலை உணவைத் தவிர்க்காமல், சரியான உணவினை எடுத்துக் கொள்ளலாம். அதற்கு முன் வெறும் வயிற்றில் தவிர்க்க வேண்டிய சில உணவுகளைப் பார்ப்போம்.

வாழைப்பழத்தில் மக்னீசியம் அதிகம் இருப்பதால், இதனை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால், மக்னீசியம் உடலில்  அதிகரித்து, கால்சியம் மற்றும் மக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக் கூடும். எனவே, எக்காரணம் கொண்டும் வாழைப் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடாதீர்கள்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கில் உள்ள டானின் மற்றும் பெக்டின், குடல் வாலைத் தூண்டி, அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச் செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தி விடும்.

தயிரில் என்னதான் நல்ல பாக்டீரியா இருந்தாலும், இதனை காலையில் வெறும் வயிற்றில் எடுப்பது சிறந்தது அல்ல. இதற்கு அதில் உள்ள நல்ல பாக்டீரியாவானது வயிற்றுப் படலத்துடன் சேர்ந்து வினைபுரிந்து, வயிற்று உப்புசத்தை ஏற்படுத்திவிடும்.

தேநீரிலும் (Tea), காஃபைன் உள்ளதால், இதனை வெறும் வயிற்றில் குடிக்காதீர்கள். சொல்லப் போனால் தேநீரில் அமிலம் அதிகமாக உள்ளதால், வயிற்றுப் படலத்தைப் பாதிக்கும்.

குளம்பி (Coffee) மிகவும் ஆபத்தான ஓர் பானம். இதனை காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், அதில் உள்ள காப்ஃபைன் தீவிரமான பிரச்சனைக்கு உள்ளாக்கிவிடும். எனவே, ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பின் காபி குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

காரமான உணவுகளை எப்போதுமே வெறும் வயிற்றில் உட்கொள்ளக் கூடாது. அப்படியே உட்கொண்டால், வயிற்றில் உள்ள அமிலத்துடன் காரம் சேர்ந்து, வயிற்றில் கடுமையான எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிடிப்புகளையும் ஏற்படுத்தும்.

மாத்திரைகளை வெறும் வயிற்றில் எடுக்கக் கூடாது. ஏனெனில் வெறும் வயிற்றில் எடுத்தால், அவை வயிற்றில் உள்ள படலத்தை அரிப்பதோடு, வயிற்று அமிலத்துடன் கலந்து, உடலில் ஏற்றத் தாழ்வுகளை உருவாக்கிவிடும். சில மருந்துகள் மருத்துவர்கள் உணவு சாப்பிடும் முன் பரிந்துரைப்பார்கள். அதை அவர்களின் ஆலோசனைப்படி சாப்பிடலாம்.

தக்காளியை எப்போதுமே வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. இதற்கு அதில் உள்ள அமிலம்தான் முக்கியக் காரணம். இந்த அமிலமானது இரைப்பையில் சுரக்கும் அமிலத்துடன் இணைந்து, அதனால் கரைய முடியாத ஜெல் உருவாகி, வயிற்றில் கற்களைக்கூட உருவாக்கும்.

சோடாவில் கார்போனேட்டட் அமிலம் அதிகம் இருப்பதால், இவற்றை வெறும் வயிற்றில் குடித்தால், அவை வயிற்றில் உள்ள அமிலங்களுடன் கலந்து, அதனால் குமட்டல் மற்றும் அசவுகரியத்தை ஏற்படுத்தும்.ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *