புதிய கண்டுபிடிப்புகள்

பிப்ரவரி 01-15
  • அலாரம் அடிப்பதோடு, சூரிய வெளிச்சம் போன்று செயற்கை ஒளியினை உமிழும் பாடிகிளாக் ஆக்டிவ் கடிகாரங்கள் பிரிட்டன் கேம்பிரிட்ஜ் நகரத்திலுள்ள லூமி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • மனிதனின் தோல் புற செல்களில் இருந்து ரத்த அணுக்களை உருவாக்க முடியும் என்று கனடாவிலுள்ள மெக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் ஸ்டெம்செல் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சித்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
  • டீசலுக்கு மாற்றாக புன்னை எண்ணெயிலிருந்து மாற்று எரிபொருளை, தஞ்சை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்துள்ள கண்டியங்காடு கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் கண்டுபிடித்துள்ளார்.
  • ஆழ்கடலுக்குள் செல்லும் ஸ்கூபா வீரர்கள் எளிதில் சுவாசிக்கும்வகையில் அணிந்து கொள்ளும் நீச்சல் உடையினை அமெரிக்காவைச் சேர்ந்த அர்னால்டு லான்ட் கண்டுபிடித்துள்ளார்.
  • கணினியை 20 மடங்கு வேகமாக இயங்கச் செய்யும் நுண்கருவியினை (சிப்செட்) பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *