குரல்

பிப்ரவரி 01-15
  • பொறுப்புணர்வுடன் செய்கிற இலக்கியங்கள்–தான் சமூகத்துக்கு அதனுடைய இலக்கியச் சுவை உணர்வை வளர்ப்பதிலும் மனித உணர்வுகளை மேம்படுத்துவதிலும் உதவும்.  ஒரு கலையின் மூலம் கலைஞன் சுய அனுபவங்களை மட்டுமல்ல, சமூக அனுபவங்களையும் சொல்லிச் செல்கிறான்.  அவ்விதம் சொல்வதே அவன் கடமை.  – இன்குலாப், கவிஞர்
  • பெற்றோர்கள் குழந்தைகளைப் புத்தகங்கள் இருக்குமிடம் நோக்கி அழைத்துச் செல்லுங்-கள்.  அவர்களைப் புத்தகங்களோடு புழங்க-விடுங்கள்.  முதலில் அவர்கள் புத்தகங்களைத் தொட்டுப் பார்க்கட்டும்.  அந்தத் தொடுதல் – உலகை அவர்களுக்குச் சரியான வகையில் அறிமுகப்படுத்தும்.
    – வைரமுத்து, திரைப்படப் பாடலாசிரியர்
  • நமது நாட்டில் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மீது கூறப்படும் லஞ்ச மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க லோக்பால் சட்டம் கொண்டுவர மத்திய அரசு ஆர்வமாக உள்ளது.  அதற்கான வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டு அனைத்து அமைச்சகங்களின் பார்வைக்கும் அனுப்பப்-பட்டுள்ளது.  -வீரப்ப மொய்லி, மத்திய சட்டத்துறை அமைச்சர்
  • அரிய இயற்கை வளங்களைத் தனது அணு ஆயுதத் தயாரிப்புக்காக வடகொரியா தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சீக்கிரம் அது அழிந்துவிடும்.
    – சுன் யுங் வூ,தென்கொரிய உயரதிகாரி
  • ஒரு தொழில் அதிபர் விலையுயர்ந்த கார் வாங்குவதற்கு தேசியமயமாக்கப்பட்ட  வங்கிகள் 7 சதவிகித வட்டியில் கடன் கொடுக்கின்றன.  ஆனால், ஒரு விவசாயி டிராக்டர் வாங்குவதற்கு அதே வங்கிகள் பத்து சதவிகித வட்டி வசூலிக்கின்றன.
  • படிப்பிற்காக மாணவர்கள் வாங்கும் கடன் தொகைக்கு பத்தரை சதவிகிதம் வட்டி என்பது எத்தனைபேருக்குத் தெரியும்?  ஆடம்பரக் கார்கள் வாங்க முன்னுரிமை – அதற்குக் குறைந்த வட்டி.  விவசாயி டிராக்டர் வாங்குவதற்குப் பின்னுரிமை – அதற்கு அதிக வட்டி.  இதுதான் தேசத்தின் கொள்கை வகுப்போர் கூறும் நியாயமாக இருக்கிறது. – சோலை, மூத்த பத்திரிகையாளர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *