பெரியாரை அறிவோமா?

அக்டோபர் 16-31

1.    கடவுள் இல்லை என்று கூறிய பெரியார் பல தேவஸ்தானங்களுக்குத் தலைவராக இருந்ததற்குக் காரணம்

அ) அவர் மறைமுகமாகக் கடவுளை வணங்கினார் ஆ) தெய்வக் குற்றத்திற்குப் பயந்து இ) தந்தையின் பணியாதலால் அதை ஏற்றுக்கொண்டார். ஈ)நல்ல வருமானம் வந்ததால் ஏற்றுக்கொண்டார்.

2.    எல்லா மதங்களும் ஒழிய வேண்டும் என்று சொன்ன பெரியார் இந்துமதத்தை அதிகமாகச் சாடியதற்குக் காரணம்

அ) இந்தியாவில் இந்து மதத்தைப் பின்பற்றுபவர்கள் அதிகம் என்பதால் ஆ) உலக மக்கள் இந்து மதத்தை ஏற்றுக் கொள்ளாமையால் இ) இந்தியாவில் இந்து மதம் கல்விப் பணி செய்யாததால் ஈ) மனிதனை மனிதனே இழிவுபடுத்தும் நிலை இந்து மதத்தில் மட்டும்தான் என்பதால்.

3.    வாழ்க்கையில் பயம் என்பது என்னவென்று தெரியாதவர் என்று பெரியாரைப் பற்றிக் கூறிய கவர்னர் யார்?

அ) சர்.கே.வி.ரெட்டி ஆ) குரானா இ) பி.சி.அலெக்சாண்டர் ஈ) கே.கே.ஷா

4.    இந்தியா விடுதலை பெற நாம் செய்ய வேண்டிய காரியங்களாக காந்தியாரிடம் பெரியார் கூறியது யாது?

அ) காங்கிரசை ஒழிக்க வேண்டும் ஆ) ஜாதியை ஒழிக்க இந்து மதத்தை ஒழிக்க வேண்டும் இ) பார்ப்பன ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டும் ஈ) இவை மூன்றையும் செய்ய வேண்டும்.

5.    பெரியார் சோவியத் நாட்டில் பயணம் செய்த காலம் எது?

அ) 10.4.1935 -_ 21.7.1935 ஆ) 7.8.1933 – _ 13.11.1933 இ) 15.12.1933 _ 27.4.1933 ஈ) 19.4.1932 _17.5.1932

6. இந்தியாவின் பூர்வகுடிகள், ஆரியர்களுக்குக் கீழான மக்களாக ஆக்கப்பட்டது எதனால் என பெரியார் கருதுகிறார்?

அ) ஆரியர்களின் வெள்ளைத் தோலுக்கு மயங்கியது ஆ)ஆரியர்களின் கூர்த்த மதியை எதிர்கொள்ள முடியாமை இ) ஆரியர்கள், பூர்வகுடிகளின் கலாச்சாரத்தை நீக்கித் தங்களுடைய கலாச்சாரத்தைப் புகுத்திவிட்டனர் ஈ) ஆரியர்களின் போர்க்கள வெற்றி

7. கடவுள், மதம், பக்தி முதலியவை தனிநம்பிக்கைகள் என்றும், அவை இல்லாவிட்டால் நட்டம் இல்லை என்றும், ஒழுக்கம், நாணயம், உண்மை ஆகியவை பொதுச்சொத்து என்றும் கூறி அவற்றின் தேவையைப் பெரியார் எவ்வாறு வலியுறுத்துகிறார்?

அ) ஒழுக்கம், உண்மை, நாணயம் இல்லாவிட்டால் மனித சமுதாயத்திற்குக் கேடு ஆ) ஒழுக்கம் இல்லாதவன் பிறர் செய்யும் காரியத்திற்குத் தொல்லை விளைவிக்கிறான் இ) நாணயமும் உண்மையும் அற்றவன், பிறரை ஏமாற்றித் தொல்லையும் வேதனையும் உண்டாக்குகிறான் ஈ) மேலே சொல்லப்பட்டவை அனைத்தும்

8.    கர்ப்பத் தடைக்குப் பெரியார் கூறும் தலையாய காரணம் என்ன?

அ) பெண்கள் விடுதலையும் சுயேச்சையும் பெறல் ஆ) பெண்களின் உடல்நலம் இ) நாட்டின் பொருளாதார உயர்வு ஈ) குடும்பச் சொத்துக் குலையாமல் இருக்க

9. இந்தியாவைவிடப் பிறநாடுகள் முன்னேறி, மேன்மையடைந்தது எவ்வாறு என பெரியார் சுட்டுகிறார்?

அ) அந்த நாட்டு மக்கள் மூடப் பழக்கங்களையும் குருட்டு நம்பிக்கைகளை யும் ஒழித்துவிட்டார்கள். ஆ) பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுக்கிறார்கள் இ) ஆராய்ச்சித் துறையில் அறிவு, பணம், ஊக்கம், முயற்சி ஆகியவற்றைச் செலவு செய்கிறார்கள் ஈ) மேற்கூறிய எல்லாமும்

10. பகுத்தறிவாளர் கழகம் எதற்கு விரோதமாக இருந்தாலும்…. விரோதம் அல்ல, என பெரியார் சொல்வதில் கோடிட்ட இடத்திற்கான சொல்லைக் காண்க.
அ) சட்டம் ஒழுங்கிற்கு ஆ) நியாயத்திற்கு இ) சமத்துவத்திற்கு ஈ) சுயமரியாதைக்கு.


 

பெரியாரை அறிவோமா? விடைகள்

1. இ

2. ஈ

3. அ

4. ஈ

5. ஈ

6. இ

7. ஈ

8. அ

9. ஈ

10. ஆ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *