இவர் பகுத்தறிவாளர்

பிப்ரவரி 01-15

பெயர் : ராண்டி நியூமேன் (Randy Newman)

பிறப்பு : 28/11/1943

துறை : ராண்டி நியூமேன் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இசை அமைப்பாளர், பாடலாசிரியர்.

சாதனை தனிப்பாடல்கள் கொண்ட இசைப்பேழைகள், திரைப்பட இசை அமைப்பு, மேடைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட  இசைத்துறையின் அனைத்துப் பிரிவுகளிலும் மிகுந்த திறமை வாய்ந்தவர் எனப் பாராட்டப்பட்டவர்.

பெற்ற விருதுகள் ஆஸ்கார், பாப்டா, கிராமி, எம்மி உள்ளிட்ட உலகின் இசைத் திறமைக்கான முதன்மை விருதுகள் அனைத்தையும் பெற்றுள்ளார்.

சிறப்பு ராண்டி நியூமேன் சிறு வயது முதலே தனது தந்தையின் வழிகாட்டுதலில் நாத்திகராக வளர்ந்தவர்.அந்த வயதிலேயே நிறவெறிக் கொள்கைக்கு எதிரானவர். பின்னாள்களில் நிறவெறியை எதிர்த்து தனி இசைத் தொகுப்பை வெளியிட்டார்.

நாத்திக பஞ்ச்

உலகத்தையும் அதன் இயக்கத்தையும் பார்க்கிறேன். அதில் உள்ள அறிவியல் மற்றும் மானிடவியலையும் பார்க்கிறேன்; ஆம், அது நாம் வாழும் ஒரு மிகச்சிறந்த இடமாகும். பரிணாமக் கொள்கை என்பது ஒரு மிகச்சிறந்த கொள்கை. இது கடவுள் கோட்பாட்டைவிட மிகச்சிறந்தது.

– புருனோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *