முற்றம்

நவம்பர் 01-15 முற்றம்

இணையதளம் www.tngovbloodbank.in

அறுவைச் சிகிச்சை, விபத்து அல்லது பிற உடல் பாதிப்பின்போது இரத்தம் தேவைப்படுகிறது.

இப்படியொரு சூழலில், அனைத்து வகையான பிரிவு இரத்தத்தையும் தன்னகத்தே வைத்திருப்பதோடு அவசர நேரத்தில் இரத்த தானம் செய்ய முன்வருவோரின் பெயரினையும் தன்னகத்தே கொண்டு திகழ்பவைதான் இரத்த வங்கிகள்.

அரசு நடத்தும் இரத்த வங்கிகள் உள்ள இடங்கள், தொடர்பு கொள்ள வேண்டிய சென்னை அலுவலக முகவரி, தொலைபேசி எண்கள், இணையதள முகவரிகள் இடம் பெற்று தொடர்புடைய அதிகாரிகளின் பெயர், பதவி, தொலைபேசி எண்கள் மற்றும் இணையதள முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இரத்த தானம் செய்ய விரும்புவோர் பதிவு செய்யும் வசதியுடன் இரத்ததான முகாம்கள் நடைபெற உள்ள இடங்களைத் தெரிந்து கொள்ளவும் உதவுகிறது. இரத்த தானம் கொடுக்க விரும்புபவர்களுக்கும் இரத்தம் தேவைப்படுவோருக்கும் பயனுள்ள இணையதளம

 


நூல்

நூல்: தமிழர் தலைவரின் அரசியல் பயணம் |

ஆசிரியர்: கி. வீரமணி

வெளியீடு: திராவிடர் கழக(இயக்க) வெளியீடு,

84/1,(50) ஈ.வெ.கி.சம்பத் சாலை, சென்னை-_7. (: 044_26618161

பக்கங்கள்: 64 | விலை: ரூ.35/_

பத்து வயது அடையும் முன்பே பெரியார் கொள்கையைப் பரப்பத் தொடங்கி, 80 வயதிலும் அதே தொண்டைத் தொடர்ந்து கொண்டிருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் அரசியல், சமூக நீதிப் பயணத்தை திரும்பிப் பார்க்கும் நூல்! துக்ளக் இதழில் இந்த ஆண்டு தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய தொடர் கட்டுரைகளுடன், 1982ஆம் ஆண்டு சோ அவர்களால் துருவித் துருவிக் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு திராவிடர் கழகத் தலைவர் அளித்த விளக்கமான நேர்காணலும், 1985ஆம் ஆண்டு வைக்கம் போராட்டம் பற்றி வெளிவந்த கட்டுரைச் செய்திக்கு தகுந்த ஆதாரங்களுடன் கொடுத்த மறுப்பும் சேர்க்கப்பட்டிருக்கிறது. மாற்றுக் கருத்துடைய இதழ் ஒன்றில் இடம் பெற்ற பதிவுகளின் தொகுப்பு என்பது கூடுதல் ஆர்வத்தைக் கொடுக்கிறது.


ஆவணப்படம்

அஃறிணைகள்
இயக்கம் : இளங்கோவன்
செல்பேசி  9789725197

திருநங்கைகளுக்கும் மனம் உண்டு, அறிவாற்றல், சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு உண்டு என்பதை வெளிப்படுத்தியுள்ள படம். ஆண் என்ற நிலையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உணர்வுகளால் மாறி திருநங்கையாகும் விதம் மனநல மருத்துவரின் விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.

அரவணைக்க வேண்டிய பெற்றோர் காட்டும் வெறுப்பு, சமூகம் பார்க்கும் பார்வை, எதிர்கொள்ளும் பிரச்சினைகள், எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வரும் வழிமுறைகள், விளக்கப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட நபர்களே கதாபாத்திரங்களாக தோன்றி இயல்பு நிலையை வெளிப்படுத்தி காண்போர் நெஞ்சையும் கருத்தையும் நிறைத்து திருநங்கைகளுக்கு சமுதாயத்தில் ஓர் அங்கீகாரத்தை – மதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. உணர்வுகளால் மாற்றம் பெற்று வரும் ஆண்களுக்கு தன்னம்பிக்கையை உண்டாக்கியுள்ள படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *