காதல் திருமணங்கள ஊக்குவிப்போம்

டிசம்பர் 16-31

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கியத் தீர்மானங்களின் சுருக்கம்:

  • மனிதத் தன்மைக்கு விரோதமான ஜாதி என்னும் பிறவி பேதத்தை  முற்றிலும் நிராகரித்து, மனிதர்களாக தமிழ்ப்பெருங்குடி மக்கள்  வாழ வேண்டும்.
  • தீண்டாமை ஒழிப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை மிகச் சரியான முறையில், துல்லியமாக செயல்படுத்த வேண்டும்.
  • தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கென்று ஒதுக்கப்பட்ட நிதியை வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.
  • இட ஒதுக்கீட்டுப் பிரச்சினையில் தாழ்த்தப் பட்டோர் – பிற்படுத்தப்பட்டோருக்கிடையே பிரித்தாளும் முறையில் சட்டங்களையோ, ஆணைகளையோ இயற்றக்கூடாது.
  • இந்திய அரசமைப்புச்சட்டத்தின் 17ஆவது பிரிவில் தீண்டாமை (UNTOUCHABILITY) ஒழிக்கப்படுகிறது என்று இருப்பதை மாற்றி ஜாதி (CASTE) ஒழிக்கப் படுகிறது என்று அரசியல் சட்டத்திருத்தம் கொண்டுவரவேண்டும்.
  • ஜாதியைப் பாதுகாக்கும், ஊக்குவிக்கும் கீதை, மனுதர்மம் போன்ற வேத சாஸ்திர, புராண, இதிகாச நூல்களைத் தடை செய்ய வேண்டும் -ஜாதி – தீண்டாமை குற்றமானவை,மனிதநேயத்துக்கு எதிரானவை என்பதை உணர்த்தும் பாடத் திட்டங்களை வகுக்கவேண்டும்.
  • இடஒதுக்கீடுக்கு மட்டுமே ஜாதி அளவுகோல்- பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டங்களைப் போடக்கூடாது- ஜாதி சின்னங்களை குறிப்பாக பூணூலை யாரும் அணியக் கூடாது. தெருக்கள், ஊர்களில் உள்ள ஜாதிப் பெயர்கள், வணிக நிறுவனங்களில் இடம்பெறும் ஜாதிப் பெயர்கள் நீக்க சட்டம் இயற்றவேண்டும்.
  • அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டத்தை செயல்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்து கொள்வோர்க்குப் பிறக்கும் குழந்தைகளை ஜாதியற்றவர்களாக அறிவித்து குறிப்பிட்ட சதவிகிதத்தில் அவர் களுக்கு இடஒதுக்கீடு (INTER CASTE QUOTA) அளிக்கப்பட வேண்டும். இந்த வகையான இடஒதுக் கீட்டின் சதவிகிதம் அதிகரித்துக் கொண்டே போக வேண்டும், ஜாதி அளவு கோல் இடஒதுக்கீட்டின் விகிதாசாரம் குறைந்து கொண்டு போகும் வகையில் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வரவேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தனி காலனிகளைக் கட்டாது, ஊருக்குள்  கட்டித் தரவேண்டும்.
  • ஜாதி மறுப்பு, மத மறுப்பு திருமணங்களையும், காதல் திருமணங்களையும் – துணைவரை இழந்தோர், மணமுறிவு பெற்றோர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கான திருமணங்களையும் ஊக்குவிப்பது, மன்றல் தேடும் விழாக்களை நடத்துவது, அவர்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது.
  • ஜாதி, மத மோதல்களைத் தொடக்க நிலையிலே தடுக்கும் வகையில், காவல்துறையில் தனிப் பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *