ஈடி அலுவலர்கள் மோடியின் ஈட்டிக்காரர்களா ?

சி.பி.ஐ, அமலாக்கத் துறை, வருமான வரித்துறை ஆகியவற்றை பிளாக்மெயில் அரசியலுக்கே பாஜக அரசு பயன்படுத்தி வருகிறது. கட்சிகளை உடைக்கவும், பிற கட்சி எம்.எல்.ஏக்களை வளைத்துப்போடவுமே பெரும்பாலும் புலனாய்வு மற்றும் நிதி நிர்வாகப் பயன்படுத்தி வந்தது வெட்டவெளிச்சமான நிலையில் தற்போது புதிய பயன்பாடும் வெளிவரத் தொடங்கியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் பா.ஜ.க. திட்டம் மூலம் அதிகபட்ச நிதியைப் பெற்றது பாரதிய ஜனதா கட்சியாகும். அந்தக் கட்சிக்கு மட்டும் கடந்த 2017-18 முதல் 2022-23ஆம் ஆண்டு வரை மொத்தம் ரூ.6570 கோடி […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – பம்பாயில் பார்ப்பனர் கொடுமை

“மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்பது ஓர் பழமொழி. அத்தகையதே நமது பார்ப்பனர்களின் தன்மையாகும். பல நூறு ஆயிரம் ஆண்டுகளாக பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களை, தூர்த்தர்களான பார்ப்பனர்கள் தங்களின் வயிற்றுப் பிழைப்பைக் கருதி உண்டாக்கிய சாஸ்திரங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு அட்டை போல் உறிஞ்சி வந்தனர் – வருகின்றனர். எத்தகைய கேவலத் தொழிலையும் செய்யப் பின்வாங்காத இழிதகைமை படைத்த இப்பார்ப்பனக் கூட்டம் இந்துக்களின், அதாவது பார்ப்பனரல்லாதாரின் மதகுருவென்றும், சுபாசுப காரியங்களை நடத்தி வைக்கும் புரோகிதர்களென்றும் மக்களை ஏமாற்றி ஆதிக்கஞ் […]

மேலும்....

வரலாற்றுச் சுவடுகள் – கடைசிக் கட்டம்

அறிஞர் அண்ணா தீகர்கள், தமக்கு ஓர் வாய்ப்புக் கிடைத்த விட்டதாகக் கருதிக் களிப்படைகிறார்கள். நாட்டுக்குக் கிடைத்துள்ள விடுதலையைத், தமக்குச் சாதகமாக்கிக் கொண்டு, சரிந்துபோன தமது செல்வாக்கை மீண்டும் புதுப்பித்துக்-கொண்டு வாழலாம் என்று மனக்கோட்டை கட்டுகிறார்கள். இதற்காக, இப்போது, சாஸ்திரிகளும், கனபாடிகளும், தமிழ் இனத்தவரான சில வைதிகர்களும், ஓயாமல், சளைக்காமல், ‘பண்டைப் பண்பாடு’ என்பது பற்றிப் பேசுகின்றனர்.சுயாட்சியை அடைந்துவிட்டோம். எனவே நாம் நமது பரம்பரைப் பண்பாட்டைப் புதுப்பிக்க வேண்டும் என்று, பேசுகின்றனர். பிரிட்டிஷ் பிடி நீங்கியதும், இதுபோன்றதோர் முயற்சி […]

மேலும்....

பெண்களும் பேறுகாலமும்

ஆரிய கலாச்சாரத்தின் உச்சநிலை சீர்கேடு குழந்தைத் திருமணம். இரண்டு வயதில், அய்ந்து முதல் 10 வயதில், 15 வயதில் பெண்களுக்குத் திருமணம் செய்வது அவர்களின் கலாச்சாரம். அதை இக்காலத்திலும் அவர்கள் தொடர்வதும், நியாயப்படுத்துவதும் மனித எதிர்செயல் ஆகும். தமிழர் வாழ்வில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் – பெண் காதலித்து மாலை மாற்றி மணம் முடித்துக்கொள்வது வழக்கம். அதில் அவர்கள் விருப்பமே முதன்மையானது. மற்றவர்கள் தலையிடுவதில்லை. ஜாதி போன்ற சமூகச் சீர்கேடுகள் இல்லை. ஆனால், ஆரியர் அயல்நாட்டிலிருந்து […]

மேலும்....

70ஆம் அகவையில் இனம் காக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

மஞ்சை வசந்தன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இது பெயர் அல்ல, வரலாறு. மிகப் பிற்படுத்தப்பட்ட ஆன்மிகக் குடும்பத்தில் பிறந்த முத்துவேல் அவர்கள் எளிய குடும்பத் தலைவர். அவருடைய மகன் கருணாநிதி என்று பின்னால் அறியப்பட்ட தட்சணாமூர்த்தி, பள்ளிப் படிப்பு படித்துக் கொண்டிருக்கும்போதே தந்தை பெரியார், அறிஞர் அண்ணாவால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவு சிந்தனையும், தமிழ் உணர்வும், இன உணர்வும் ஒரு சேரப் பெற்றவர். அதன் விளைவால்தான் தட்சணாமூர்த்தி கருணாநிதியானார். எந்த ஜாதியினர் படிக்கக்கூடாது, குலத்தொழிலையே செய்யவேண்டும் என்று ஆதிக்க […]

மேலும்....