உங்களுக்குத் தெரியுமா?

நான் குற்றச் செயல்கள் புரிந்தா சிறைக்குப் போனேன்? ஜாதியை ஒழிப்பதற்காகப் போராடினேன்! மறியல் செய்தேன்! சிறை சென்றேன். ஜாதிக்கு ஆதாரமான சட்டத்தை எரித்தேன்! இதற்காக எனக்கு மூன்றாண்டு சிறை! இதைவிட பெரும்பேறு உண்டா? என்று பெரியார் கேட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? (‘விடுதலை’- 9.11.1957)

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு கடவுள் வேண்டுமானால் உங்களை இழிவுபடுத்தாத, சூத்திரர்களாக்காத, பஞ்சமர்களாக்காத கடவுள்களை வைத்துக் கொள்ளுங்கள். ராமனும், கிருஷ்ணனும் நம் கடவுளாய் இருப்பதற்குத் தகுதியானவர்களா? என்று தந்தை பெரியார் அன்றைக்கே கேள்வி எழுப்பினார் என்பது உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

பொங்கல் வாழ்த்து

ஆறு. கலைச்செல்வன் “இனியா, அடுத்து வாரம் உனக்கு தேர்வுகள் தொடங்கவுள்ளது. ரொம்ப நேரமா நீ செல்பேசியையே தடவிக்கொண்டு இருக்கியே! அப்புறம் எப்படி தேர்வுகளை நல்லமுறையில் எழுத முடியும்?” தனது பெயர்த்தி இனியாவை அன்புடன் கடிந்து கொண்டார் தாத்தா முத்துராஜா. “தாத்தா, இன்னும் த்ரீ டேய்ஸ்சில் எனக்கு பர்த்டே வரப்போவுது இல்லையா! அதை என்னோட ஃபிரண்ட்ஸ்களுக்கு மெசேஜ் பண்ணிகிட்டு இருக்கேன். அதோடு நம்ம ரிலேஷன்ஸ் எல்லோரும் வரவேண்டும்னு லைக் பண்றேன்,” என்று தாத்தாவுக்குப் பதில் சொன்னாள் இனியா. “மிக்க […]

மேலும்....

உங்களுக்குத் தெரியுமா?

திருக்குறள் பற்றிய செய்திகள் எளிய மக்கள் அறிந்திராத காலத்திலேயே (1929) மலிவு விலையில் திருக்குறளைப் பதிப்பித்துப் பரப்பியவரும், திருக்குறளைப் பரப்பவே தனி மாநாடு (1949) நடத்தியவரும் தந்தை பெரியார் என்ற வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

மேலும்....

டாக்டர் டி.எம். நாயர் பிறப்பு – 15.1.1868

  திராவிட இயக்கச் சிற்பிகளுள் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தை அமைத்த இவரை, திராவிட இயக்கத்தின் ‘இதயம்’ எனக் கூறுவதே மிகவும் பொருத்தமானது. தனது உரையை “எழு, விழி! இல்லையெனில் எப்போதும் வீழ்ந்துகிட!’ என்றுதான் முடிப்பார். சமூகநீதியைக் காக்கப் போராடியவர். “ஷஸ்டிஸ்’ இதழின் பதிப்பாசிரியர். “திராவிட லெனின்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர்.

மேலும்....