டாக்டர் டி.எம். நாயர் பிறப்பு – 15.1.1868

  திராவிட இயக்கச் சிற்பிகளுள் முன்னோடியாய்த் திகழ்ந்தவர். தென்னிந்திய நலஉரிமைச் சங்கத்தை அமைத்த இவரை, திராவிட இயக்கத்தின் ‘இதயம்’ எனக் கூறுவதே மிகவும் பொருத்தமானது. தனது உரையை “எழு, விழி! இல்லையெனில் எப்போதும் வீழ்ந்துகிட!’ என்றுதான் முடிப்பார். சமூகநீதியைக் காக்கப் போராடியவர். “ஷஸ்டிஸ்’ இதழின் பதிப்பாசிரியர். “திராவிட லெனின்’ என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்டவர்.

மேலும்....

வெள்ளப்பேரிடர் துயர் துடைக்க பெரியார் அறக்கட்டளை உதவி

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச் செயலகத்தில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சந்தித்து, மிக்ஜாம் புயல் பேரிடர் நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம், பெரியார் மணியம்மை கல்வி அறப்பணிக் கழகம் மற்றும் பெரியார் கல்வி நிறுவனப் பணியாளர்கள் சார்பில் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். உடன் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன் ஆகியோர் உள்ளனர்.(11.12.2023)

மேலும்....

ஜோதிடம் கடவுள் நம்பிக்கைக்கே எதிரானது!

கடவுள் தத்துவம் – மனிதனின் வாழ்வை கடவுள் தீர்மானிக்கிறார்; அதற்கான விதியை கடவுளே வகுக்கிறார் என்கிறது. ஆனால், ஜோதிடம், மனித வாழ்வை கிரகங்கள் தீர்மானிக்கிறது என்கிறது. இது கடவுளை மறுக்கும் செயல் அல்லவா? மனித வாழ்வைத் தீர்மானிப்பது கடவுளா? கிரகங்களா? ஜோதிட மேதைகள் பதில் சொல்வார்களா? நிலையாகவுள்ள சூரியன் இடம் பெயர்வதாகக் கூறும் ஜோதிடம் அப்பட்டமான பித்தலாட்டம் அல்லவா?

மேலும்....

வேண்டுதலும், பிரார்த்தனையும் விளையாட்டில் வெற்றி தருமா?

கொரோனா காலத்தில் கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கே மாஸ்க் அணிவித்து, கோயிலை இழுத்து மூடினார்கள் அப்போதே கடவுளின் சக்தி சந்தி சிரித்தது. எவ்வளவு கண்கூடாக பலவற்றைப் பார்த்தாலும், பாமர மக்கள் மட்டுமல்ல, அறிவியல் படித்த பட்டதாரிகள் கூட மூடநம்பிக்கையின் முகட்டில் நிற்பது வேதனைக்குரிய நிகழ்வுகளாகும். சந்திரனுக்கு விண்கலம் அனுப்பினால் ஏழுமலையானுக்கு வேண்டிக்கொள்வது என்ன விஞ்ஞானம்? இராக்கெட் விடுவதற்கும் ஏழுமலையானுக்கும் என்ன தொடர்பு? வெற்றிகரமாக ஏவப்படவும், இலக்கு நிறைவேறவும் ஏழுமலையான் எந்த வகையில் உதவுவார்? சந்திரயான்-3 நிலவின் தரையில் […]

மேலும்....

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் – பிறப்பு 29.11.1908

கலைவாணரைப் பற்றி தந்தை பெரியார் அவர்கள் 1.11.1944 தேதியிட்ட ‘குடிஅரசு’ ஏட்டில், “இனி அவர் செத்தாலும் சரி; அவர் பணம் காசெல்லாம் நழுவி அன்னக்காவடி கிருஷ்ணன் ஆனாலும் சரி; நாடகப் புரட்சி உலகைப் பற்றிச் சரித்திரம் எழுதப்பட்டால், அச்சரித்திரத்தின் அட்டைப் படத்தில் என்.எஸ். கிருஷ்ணன் படம் போடாவிட்டால், அச்சரித்திரமே தீண்டத் தகாததாகிவிடும்’’ என்று எழுதினார். இதைவிட கலைவாணருக்கு வேறென்ன சிறப்பு வேண்டும்?

மேலும்....