பண்பாட்டுப் படையெடுப்பிற்கு பலியாகலாமா? சிந்திப்பீர் !

நவராத்திரி கொண்டாடி, நாக்கிலே எழுதினால் படிப்பு வரும் என்று ஆரிய பார்ப்பான்முன் அமரும் தமிழா! உனக்கு சரஸ்வதியா கல்வி கொடுத்தாள்? சரஸ்வதி கல்வி கொடுத்திருந்தால் உன் பாட்டனுக்கும் முப்பாட்டனுக்கும் அவள் ஏன் கொடுக்கவில்லை? சிந்தித்தாயா? ஏகலைவன்களைக் காவு வாங்கிய அவலம் மாறியது யாரால்? எண்ணிப் பார்த்தாயா? தீபாவளியைத் தீவிரமாய்க் கொண்டாடுகிறாயே! அது தமிழன் பண்டிகையா? காசைக் கரியாக்கும், காற்றை மாசாக்கும் கண்மூடிச் செயல்களைக் கற்றவர்களும் செய்வது சரியா? கற்றவர்கள் மற்றவர்களுக்கு வழிகாட்ட வேண்டாமா? விழி திறக்க வேண்டாமா? […]

மேலும்....

ஸனாதனம் பற்றி தந்தை பெரியார்

“பார்ப்பான் காலைக் கழுவித் தண்ணீரைத்தான் குடிக்க வேண்டும். பார்ப்பான் சாப்பிட்டு மீதியான எச்சிலைத்தான் சாப்பிடவேண்டும். பார்ப்பானைத்தான் கடவுளாகக் கருதி, கும்பிட வேண்டும் என்று இருப்பதை மாற்றாமல், சும்மா இருந்து கொண்டு வரும் உங்களுக்குக் கடவுள் அருகில் நாங்கள் போனால் மாத்திரம் கோபம் வருகிறதே” என்று கேட்டேன். அவர்களால் பதில் ஒன்றும் சொல்ல முடியவில்லை. பிறகுதான் சந்துக்குச் சந்து பிள்ளையாரைப் போட்டு உடைக்கச் சொன்னேன். இராமன் படத்தைத் தீயிட்டுக் கொளுத்தச் சொன்னேன். இராமாயணத்தை அணுஅணுவாகப் பிரித்து எழுதினேன். பார்ப்பனர்கள் […]

மேலும்....

ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் (பிறப்பு – 15.9.1893)

திரு. சவுந்தரபாண்டியன் அவர்கள் மதுரை மாவட்டம், பட்டிவீரன்பட்டியில், 15.9.1893இல் பிறந்தார். இவரின் பெற்றோர் திரு. அய்ய நாடார் – திருமதி. சின்னம்மாள் ஆவார்கள். மதுரை, விருதுநகர் ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பும், கல்லூரிக் கல்வியும் பயின்றார். இதன்பின் தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டு, அதன்வழி சுயமரியாதை இயக்கத்தில், பெரியார் அவர்களோடு இணைந்து செயல்படத் தொடங்கினார். வெறியோடு சுயமரியாதைக் கொள்கைகளைப் பின்பற்ற முனைந்த இவரை, 1929இல் செங்கற்பட்டு மாநாட்டுத் தலைவராக பெரியார் அவர்களும், இயக்கத்தின் முன்னோடிகளும் தேர்ந்தெடுத்தனர். […]

மேலும்....

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மறைவு 30.8.1957

திராவிடர் இயக்கங்களான நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகங்களால் ஈர்க்கப்பட்டு அதன் கருத்துகளை திரைப்படங்களில் முதன்முதலில் கொண்டு வந்தார். கலைவாணரின் சிறப்பு என்பது ‘திரைப்படத்துறை’யில் அறிவுப் பிரச்சாரம் செய்ததும், அத்துறையில் ஈட்டியதை, வாரி வழங்கியது என்பதாகவும்தான் அமைந்துள்ளது. கலைவாணர் ஒரு தனி மனிதரல்லர்; அவர் ஒரு சகாப்தம்! அவரோடு அந்த சகாப்தம் முடிந்துவிட்டது. அப்படிப்பட்ட ஒரு சகாப்தம் இனி தோன்றுவது கடினம். என்னுடைய ஆசிரியர் ‘குடி அரசு’ என்று கூறிய கொள்கைக் கோமான்! […]

மேலும்....

கைவல்ய ‘சாமியார்’ (22.8.1877)

மலையாளக் கள்ளிக்கோட்டையில் 22.8.1877 அன்று பிறந்த பொன்னுச்சாமியவர்கள்(கைவல்யம்) திருச்சியில் ஏழாம் வகுப்பு வரை பள்ளிக்கல்வி பயின்றாரெனினும் அறிவுக்கடலாக விளங்கினார். தந்தை பெரியார் அவர்கள் தமது இளமைப் பருவத்தில், அவரது கடைக்கு வரும் கணக்கற்ற ‘சாமியார்’களோடும் ‘பாகவதர்’களோடும் தருக்கமும் கிண்டலும் செய்து கொண்டிருந்த நாள்களில் அறிமுகமானவர். பிற்காலத்தில் இயக்கத்தின் விலை மதிக்கவொண்ணா உடைமையாய் கைவல்யம் அவர்கள் திகழ்ந்தார். கைவல்ய சாமியார், அய்யா அவர்களின் சுயமரியாதை இயக்கம் அமைக்கும் பணியில் உற்ற தோழராகத் தோள் கொடுத்தார். ‘குடிஅரசு’ கட்டுரைகளின் வாயிலாகத் […]

மேலும்....