வேண்டுதலும், பிரார்த்தனையும் விளையாட்டில் வெற்றி தருமா?

2023 டிசம்பர் 1-15, 2023 பெட்டி செய்திகள்

கொரோனா காலத்தில் கோயிலில் உள்ள கடவுள் சிலைகளுக்கே மாஸ்க் அணிவித்து, கோயிலை இழுத்து மூடினார்கள் அப்போதே கடவுளின் சக்தி சந்தி சிரித்தது.
எவ்வளவு கண்கூடாக பலவற்றைப் பார்த்தாலும், பாமர மக்கள் மட்டுமல்ல, அறிவியல் படித்த பட்டதாரிகள் கூட மூடநம்பிக்கையின் முகட்டில் நிற்பது வேதனைக்குரிய நிகழ்வுகளாகும்.

சந்திரனுக்கு விண்கலம் அனுப்பினால் ஏழுமலையானுக்கு வேண்டிக்கொள்வது என்ன விஞ்ஞானம்? இராக்கெட் விடுவதற்கும் ஏழுமலையானுக்கும் என்ன தொடர்பு? வெற்றிகரமாக ஏவப்படவும், இலக்கு நிறைவேறவும் ஏழுமலையான் எந்த வகையில் உதவுவார்? சந்திரயான்-3 நிலவின் தரையில் இறங்க
விஞ்ஞானிகள் திறமைதானே உதவியது? இதில் கடவுள் செய்தது என்ன?

அண்மையில் குஜராத்தில் நடந்த கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா வெற்றி பெற ஆயிரமாயிரம் பிரார்த்தனைகள், யாகங்கள், வேண்டுதல்கள்.
என்ன ஆயிற்று?

கடவுளால் வெற்றியைத் தரமுடிந்ததா? இல்லையே! உண்மை இப்படியிருக்க, விளையாட்டில் வியூகம் அமைத்து திறமை காட்டு
வதற்குப் பதில், வேண்டுதல் நடத்திக்கொண்டிருப்பது அறிவுடைமையாகுமா? படித்தவர்கள்கூட பகுத்தறிவின்றி நடப்பது சரியா?
சிந்தித்து அறிவுடன் வாழுங்கள். அதுதான் மனிதர்க்கு அழகு!