தமிழறிஞர் சாமி சிதம்பரனார்

பிறப்பு : 1.12.1900 தமிழறிஞர் சாமி சிதம்பரனார் தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத் தளபதிகளில் ஒருவர். ‘குடிஅரசு’ ஏட்டில் அறிவார்ந்த கருத்துகளை அள்ளித் தந்து அறிவியக்கத் தொண்டாற்றினார். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை முதன்முதலில் ‘தமிழர் தலைவர்’ என்னும் தலைப்பில் நூலாக எழுதியவர். ‘விடுதலை’ பொறுப்பாசிரியராகவும் பணியாற்றியவர்.

மேலும்....

சிறுகதை : மாதமும் மடமையும்

ஆறு.கலைச்செல்வன் புரட்டாசி மாதம் வந்தாலே மாதவன் வீட்டில் சண்டை சச்சரவுகளும் ஆரம்பமாகி-விடும். மாதவனின் துணைவி மல்லிகா புரட்டாசி மாதத்தில் அசைவ உணவு சாப்பிடமாட்டார். புரட்டாசி மாதம் முழுவதும் சுத்த சைவமாகி விடுவார். ஆனால், மாதவன் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அந்த மாதத்தில் தான் அதிகமாக மீன், ஆட்டுக்கறி, கோழிக்கறி என்று எல்லாவற்றையும் வாங்கி வருவார். “வருஷா வருஷம் வேணும்னே இப்படிப் செய்றீங்க என்னைப் பார்க்க வைச்சுக்கிட்டு சாப்பிடறதில் அப்படியென்ன உங்களுக்குச் சந்தோஷம்?’’ என்று ஒரு நாள் கேட்டார் மல்லிகா. […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள்!

விவசாயிகளை ஏமாற்ற முடியாது! கே1:     ‘உ.பி.யில் காங்கிரஸ் தனித்து நிற்கும்’ என்ற பிரியங்கா காந்தியின் அறிவிப்பு தற்கொலைக்குச் சமமல்லவா? பி.ஜே.பி.க்கு எதிரான வலுவான வெற்றிக் கூட்டணியை அமைக்க தமிழ்நாடு முதலமைச்சரும், நீங்களும் முயற்சி மேற்கொள்வீர்களா?        – த.வெங்கடேசன், திருவள்ளூர் ப1:        அங்குள்ள கள நிலவரப்படிதான் அரசியல் முடிவுகள் அமையும். இங்கிருந்து முயற்சிக்க அது தமிழ்நாடு அல்ல; தமிழ்நாட்டில் கட்டப்பெற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் _ 10 ஆண்டுகால போராட்டங்களால் விளைந்தது. அங்கே அப்படிப்பட்ட சூழல் அமையவில்லை; நம் […]

மேலும்....

சுயமரியாதை நாள்

நான் கண்ட ஆசிரியர் வை.பார்த்திபன் செயலாளர்,  பகுத்தறிவாளர் பேரவை, பம்மல் நான் ஆசிரியர் அவர்களை முதன்முதலில்  தந்தை பெரியாருக்கு ‘தங்கத் தமிழ்நாடு’ வழங்குகின்ற விழாவில் விழுப்புரத்தில் பார்த்தேன். அனேகமாக 1964ஆக இருக்கு-மென்று நினைக்கின்றேன். மேடைக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்த ஆசிரியர் அவர்களை வழிமறித்து, நான் அண்ணாமலை நகர் திராவிட மாணவர் கழகச் செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர், கடந்த சுமார் 58 ஆண்டுகளாக பலமுறை சந்தித்து வருகின்றேன். பழகுகின்ற முறையிலே நான் அவரிடம் இதுவரை […]

மேலும்....

கவிதை : ஆசிரியர் நீடுவாழ்க!

முனைவர் கடவூர் மணிமாறன் மெய்யான தொண்டறத்தில் மேன்மை பெற்ற                மேதினியே எந்நாளும் புகழ்ந்து பேசும் அய்யாவின் நிழலான அணுக்கத் தொண்டர்;                ஆசிரியர் அளப்பரிய ஆற்றல் மிக்கார்; பொய்யுரைத்து வாழ்கின்ற புல்லர் தம்மின்                புரட்டுகளை எடுத்துரைக்கும் புரட்சி யாளர்! உய்வுக்கே வழிகாட்டும் உழைப்புச் செம்மல்;                உயர்வான பகுத்தறிவுக் கொள்கை வேழம்!   சுறுசுறுப்பாய் எந்நாளும் இயங்கு கின்ற                சுடரொளியாய்த் தமிழினத்தைப் பாது காக்கும் பொறுப்பினையே வாழ்நாளில் ஏற்றுக் கொண்ட                பொதுநோக்குக் […]

மேலும்....