சுயமரியாதை நாள்

டிசம்பர் 1-15,2021

நான் கண்ட ஆசிரியர்

வை.பார்த்திபன்

செயலாளர்,  பகுத்தறிவாளர் பேரவை, பம்மல்

நான் ஆசிரியர் அவர்களை முதன்முதலில்  தந்தை பெரியாருக்கு ‘தங்கத் தமிழ்நாடு’ வழங்குகின்ற விழாவில் விழுப்புரத்தில் பார்த்தேன். அனேகமாக 1964ஆக இருக்கு-மென்று நினைக்கின்றேன். மேடைக்கு வேகமாகச் சென்று கொண்டிருந்த ஆசிரியர் அவர்களை வழிமறித்து, நான் அண்ணாமலை நகர் திராவிட மாணவர் கழகச் செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டேன். அதன் பின்னர், கடந்த சுமார் 58 ஆண்டுகளாக பலமுறை சந்தித்து வருகின்றேன். பழகுகின்ற முறையிலே நான் அவரிடம் இதுவரை சிறிதளவும் மாற்றம் காணவில்லை. காரணம், நான் தாராசுரம் சுயமரியாதைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்கின்ற அடிப்படைதான்.

நான் ஆசிரியர் அவர்களை  ஒருமுறை, பொள்ளாச்சியிலிருந்து சென்னை வந்தபோது,  ‘விடுதலை’ அலுவலகத்தில் சந்தித்தேன். எப்படி இருக்கிறீர்கள் என்று என்னை விசாரித்தபோது, வழக்கமாக எல்லோரும் கூறுவதுபோல் ‘ஏதோ, இருக்கிறேன்’ என்று கூறினேன். உடனே ஆசிரியர் அவர்கள், “அது ஏன், ஆங்கிலத்தில் கேட்டால், “Fine, Thank u” என்று சொல்கிறீர்-கள். தமிழில் கேட்டால் தன்னம்பிக்கை–யில்லாமல் பதில் சொல்கிறீர்கள்’’ என்று கேட்டார். எனக்கும் ‘சுரீர்’ என்று உரைத்தது. அன்றிலிருந்து நான் யார் கேட்டாலும் நன்றாக இருக்கிறேன் என்று சொல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளதோடு, என்னிடம் பழகுகிறவர் களிடமும் இதனை எடுத்துச் சொல்லி மாற்றி வருகின்றேன். இந்த மாற்றத்திற்குக் காரணம் நம் ஆசிரியர் அவர்கள் தான் என்பதைப் பெருமையோடு பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகின்றேன். ஒருமுறை திருவாரூர் தங்கராசு அவர்களைச் சந்தித்து உரையாடியபோது,  “குத்தூசி குருசாமிக்குப் பிறகு ஆசிரியர் காலத்தில்தான் தொடர்ச்சியாக தந்தை பெரியார் பிறந்தநாள் மலர் சிறப்பாக வெளிவருகிறது’’ என்று மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

1980 நாடாளுமன்ற இடைத்தேர்தலின்-போது, மார்க்சிஸ்ட் கட்சியுடன் கூட்டணி வேண்டாம் என்று ஆசிரியர் கலைஞருக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். ஆனால், கலைஞர் அரசியல் காரணங்களுக்காக அவர்களுடன் கூட்டணி அறிவித்தபோது நான் நீலகிரி மாவட்டத்தில் பணியாற்றிக்-கொண்டிருந்தேன். தி.மு.க. தோழர்கள் என்னிடம், “இப்போது என்ன செய்வீர்கள்?’’ என்று இளக்காரமாகக் கேட்டபோது, “மார்க்சிஸ்ட் நிற்கின்ற இடங்களைத் தவிர, மற்ற இடங்களில் தி.மு.க. கூட்டணியை ஆதரிப்பதாக எங்கள் முடிவு இருக்கும்’’ என்று குறிப்பிட்டேன். அதேபோன்று தலைவர் அவர்களின் முடிவும் அமைந்திருந்தது. 20.11.2021 செய்தித்தாள்களில், பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர்காண்ட் மாநிலத்தில் தேவஸ்தான வாரியச் சட்டம் நிறைவேற்றப் பட்டுள்ளது என்ற செய்தியைப் படித்தேன். உடனே முக நூலில் தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கட்டுப்பாட்டி-லிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று போராடுகின்றவர்கள் உத்தரகாண்டில் புதிய சட்டம் கொண்டு வருகிறார்களே என்று அவர்களின் இரட்டை வேடத்தைச் சுட்டிக்-காட்டி பதிவிட்டிருந்தேன். அன்றே ‘விடுதலை’-யில் இந்தப் பொருள் குறித்து ஆசிரிய உரை (தலையங்கம்) வெளிவந்தது. தொடர்ந்து தந்தை பெரியாரைப் படித்து வருகின்றவர்களுக்கு எண்ணம் நேர்கோட்டில் அமையும் என்பது உண்மையாகும். 1936இல் தொடங்கி இன்றளவும் சுமார் 100க்கு மேற்பட்ட சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வருகின்ற குடும்பம் என்கிற வகையில் எங்கள் குடும்பத்தின்மீது ஆசிரியர் அவர்களுக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் உண்டு. அதற்கு அடையாளமாக நாங்கள் சற்றும் எதிர்பாராத வகையில் 23.11.2015இல் நடைபெற்ற நீதிக்கட்சி நூற்றாண்டு மற்றும் சுயமரியாதை இயக்கம் 90ஆம் ஆண்டு விழாவில் எங்கள் குடும்பத்திற்கு ஒரு பாராட்டு இதழை வழங்கினார்கள். அதைப் பெறும்போது எங்கள் குடும்பத்தினர் ஆரம்ப காலங்களில் பட்ட துன்பங்களுக்கெல்லாம் மாமருந்தாக அமைந்தது. எங்கள் குடும்பத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய பெருமையாகக் கருதுகின்றோம். இந்தப் பற்று, பாசத்திற்கு நாங்கள் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருப்போம்.

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வாழ்க பல்லாண்டு!ஸீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *