பெண்ணால் முடியும்! : இராணுவ அதிகாரியாய் விவசாயியின் பெண்!

லட்சியக் கனவோடு பயணம் செய்யும் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் எத்தனை இடர்ப்பாடுகள் வந்தபோதும் சோர்வடையாது, அந்தப் பயணத்தில் வெற்றிக் கனியை ஒருநாள் வென்றே தீருவர். அப்படி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் ஒரு குக்கிராமத்-தில் பிறந்து, குடும்பம், விவசாயம், கால்நடைகள் என்று வாழ்ந்து கொண்டிருக்கும் 23 வயதேயான சரண்யா, மிக விரைவில் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக நுழையவிருக்கிறார். அண்மையில் நடந்த எஸ்.எஸ்.பி (Service Selection Board) எனப்படும் ராணுவ உயரதிகாரி-களுக்கான தேர்வில் நாடு […]

மேலும்....

ஆசிரியர் பதில்கள் : தமிழ்நாடு அரசால் வெற்றி பெற முடியும்!

கே: இடஒதுக்கீட்டை மாற்றி அமைக்க 7.6.2022 ‘தினமணி’ கட்டுரையில் சுப. உதயகுமார் கூறும் எட்டு அடிப்படைகள் சரியா? – மகிழ், சைதை ப: தற்போது சட்டப்படி நமக்கு அளிக்கப்பட்டிருக்கும் இடஒதுக்கீடே நடைமுறையில் சரிவர செயல்படுத்தப்-படாமல் இருக்கும் நிலையில், இப்படிப்பட்ட கருத்துகள் இன்றைய சூழலில் சாத்தியப்படாது என்பதே யதார்த்தம். அவர் நல்லெண்ணத்துடன் கூறியுள்ளார். என்றாலும் நடைமுறைச் சிக்கல்கள் அதிகம். கே: முகமது நபியை, பி.ஜே.பி. தலைவர்கள் கேவலமாகப் பேசியதால் இஸ்லாம் நாடுகளின் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளதைப் பற்றி தங்கள் […]

மேலும்....

விழிப்புணர்வு :உறவில் திருமணம்! உயர்நிலையில் தமிழகம்!

ஜாதிக்குள் திருமணம், மதத்திற்குள் திருமணம் என்பதுபோல உறவுக்குள் திருமணம் என்பதும் தவிர்க்கப்பட வேண்டிய, ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அத்தை பிள்ளை, மாமா பிள்ளை, அக்காள் பிள்ளை என்று இரத்த உறவில் திருமணம் செய்து அதில் பிறக்கும் பிள்ளைகள் உடல்நலமும், உள நலமும் குன்றிப் பிறப்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நாளும் கண்கூடாகவும் இப்பாதிப்புகளைப் பல குடும்பங்களில் பார்க்கவும் முடிகிறது. உறவுக்குள் திருமணம் என்ற இந்த அவலம் தமிழ்நாட்டில் உயர்நிலையில் இருக்கிறது என்ற புள்ளிவிவரம் நமக்குக் கூடுதல் கவலையளிக்-கிறது. நெருங்கிய […]

மேலும்....

சிறுகதை : தமயந்தி

மூவலூர் இராமாமிருதம் அம்மையார் (1883 – 1962) அடக்குமுறையும் ஆதிக்க வெறியும் நிறைந்திருந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் திருவாரூரில் பிறந்தவர். வளர்ந்தது – வாழ்ந்தது மூவலூரில். இசை வேளாளர் குலத்தில் பிறந்ததினால் தேவதாசியாக மாறக் கட்டாயப்படுத்தப் பட்டவர். தன் குலத்தின் இழிவையும், சிலரின் சுய நலத்திற்காகத் தன் குலப் பெண்களின் வாழ்வு கலை, இலக்கியப் பாதுகாப்பு என்னும் பேரால் நசுக்கப்படுகின்றன என்பதையும் உணர்ந்த இராமாமிர்தம் அம்மையார் தேவதாசி முறை ஒழிப்பிற்காகவே தன் வாழ்நாளைப் போராட்ட நாள்களாக வரித்துக் […]

மேலும்....

திராவிடம் வெல்லும்!

கைம்பெண் மறுமணம் – பெரியார் வழியில் மராட்டியம்! மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றுள்ள கைம்பெண் திருமணம் குறித்து “இந்தியன் எக்ஸ்பிரஸ்” ஆங்கில ஏடு (13.5.2022) வெளியிட்டுள்ள செய்தியில், “தமிழ்நாட்டில் தந்தை பெரியார் 100 ஆண்டுகளுக்கு முன்னர் என்ன செய்தாரோ அது இன்று மராட்டிய மாநிலத்தில் நடைபெற்றுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது. தந்தை பெரியாரின் ஒன்றுவிட்ட தங்கை மகள் 7 வயது முத்தம்மாவுக்கு, 12 வயது மணமகனைத் திருமணம் செய்து வைத்தார்கள். அவன் திடீரென அம்மை நோயால் இறந்து போனான். அப்போது […]

மேலும்....