மாற்றம்!

… ஆறு. கலைச்செல்வன் … கடலூரிலிருந்து திண்டிவனம் வழியாக சென்னை செல்லும் பேருந்து புறப்படத் தயாரானது. மூன்று பேர் உட்காரக்கூடிய இருக்கையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்தார் சிவக்குமார். அவர் அருகில் சுப்ரமணியன், சேகர் ஆகியோர் உட்கார்ந்தனர். பேருந்து கிளம்பியது. கிளம்பிய அடுத்த நொடியே “கல்யாணம்தான் கட்டிகிட்டு ஓடிப்போலாமா” என்ற பாடலை பெருத்த ஒலியுடன் இயக்கினார் ஓட்டுநர். சிவக்குமாருக்கு ஒரே எரிச்சலாக வந்தது. காதுகளைப் பொத்திக்கொண்டார். ஆனாலும் இரைச்சலை அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. “பாட்டை நிறுத்து!” என்று பலமாகக் […]

மேலும்....

கீத கோவிந்தம்

தில்லை மறைமுதல்வன் அப்போது முன்னிரவு முடிந்து கொண்டிருக்கும் வேளை. இருளினூடே நின்று கொண்டிருந்த ஜகந்நாதரின் ஆலயத்தினுள்ளே பிரகாசமான விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. ஆலயத்தின் உயர்ந்த சுவர்களிலும், பருமனான தூண்களிலும் சிற்பிகளின் கைவண்ணம் தவழ்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்தக் சிற்பங்கள் புகையும் அழுக்கும் இருளும் பட்டு மங்கி இருந்தன. கர்ப்பக்கிருகத்தில் சிற்பி வடித்த சிலைக்குள்ளே உலகைக் காத்து ரட்சிக்கும் ஆண்டவன் ஒளிந்து கொண்டிருந்தார். அவருக்கு முன்னே, பிரகாரத்தில், அவ்வூரின் ஆண்களும், பெண்களும் முதியவரும் குழந்தைகளும், கற்றோரும் மற்றோரும் குழுமியிருந்தனர். […]

மேலும்....

கருப்புக் கயிறு

ஆறு.கலைச்செல்வன் கராத்தே மாஸ்டர் அன்புச்செல்வன் நடத்தும் கராத்தே பள்ளியில் அங்கு பயிற்சி பெற்றுவரும் மாணவ- மாணவிகள் மிகவும் கவலையில் இருந்தார்கள். காரணம், பல ஆண்டுகளாக அவர்கள் கராத்தே பயிற்சி மேற்கொண்டும் அவர்களுக்கு கராத்தே போட்டிகளில் பங்கு பெற வாய்ப்புக் கிட்டவில்லை. ‘நாட்டில் எந்த இடத்திலும் மாவட்ட, மாநில அளவில் கராத்தே போட்டிகளே நடக்கவில்லையா?’அல்லது மாஸ்டர் நம்மை அழைத்துச் செல்லவில்லையா? எனத் தங்களுக்குள் பேசி வருத்தப்பட்டனர். எவ்வளவு காலம்தான் பயிற்சியில் இருப்பது, தங்களது திறமைகளை போட்டிகளில் கலந்துகொண்டால் மட்டும்தானே […]

மேலும்....

சிறுகதை – திருச்செந்தூர் முருகன்

… ஏ.வி.பி. ஆசைத்தம்பி … திருநெல்வேலி ரெயில்வே ஸ்டேஷனில் அன்று ஒரே கூட்டம். காரணம் திருச்செந்தூரில் விசாகமாம். முருகனைத் தரிசிக்கவே பக்தகோடிகள் வெள்ளம்போல் கூடியிருந்தனர். திருச்செந்தூர் செல்லுகிற இரயில்வண்டி இழுத்துவிடப்பட்டது. ஒருவரை ஒருவர் ஆண் பெண் வித்தியாசமின்றி அத்வைத வேத அடிப்படையில் இடித்துக்கொண்டு இரயிலில் ஏறினர். ‘ஏன்தான் இந்த அவசரமும் அவதியுமோ! நாளைக்குப் போனால் முருகன் இருக்க மாட்டாரா? அல்லது இரயில் போகாதா? இப்படித் துணிந்து எண்ணத் தூண்டும் அங்கிருந்த பரிதாப நிலை! ஒரு வண்டியில் நெருக்கடி […]

மேலும்....

– சிறுகதை – நல்ல நேரம்? – ஆறு. கலைச்செல்வன்

-ஆறு. கலைச்செல்வன் ‘காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை” என்று அரசியல் தலைவர்கள் மேடைகளில் முழங்குவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். “காஷ்மீரில் ஒருவனுக்கு தேள் கொட்டினால் கன்னியாகுமரியில் உள்ளவனுக்கு நெறி கட்டுமாம்” என்ற கூற்றையும் கேள்விப் பட்டிருக்கிறோம். காஷ்மீரை நினைத்தால் கூடவே “காஷ்மீர் பியூட்டிபுல் காஷ்மீர்”’ என்ற பாடலும் நினைவுக்கு வரும். தமிழ்த் திரைப்படங்கள் பல காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும். பழைய தமிழ்த் திரைப்படம் “தேன் நிலவு” பல காட்சிகள் காஷ்மீரில் எடுக்கப்பட்டிருக்கும். அப்போது காஷ்மீர் தலைநகர் சிறீநகரில் படம் […]

மேலும்....