ராபர்ட் கால்டுவெல் பிறப்பு – 7.5.1814

2023 பெட்டி செய்திகள் மே 1-15,2023

(திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் எழுதியவர்)

ராபர்ட் கால்டுவெல் 7.5.1814ஆம் ஆண்டு அயர்லாந்தில் பிறந்தார். 1838-இல் சென்னை வந்த ராபர்ட் கால்டுவெல் சென்னையிலேயே தங்கி மூன்றாண்டுகளில் தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டார்.

திருநெல்வேலியில் பணியாற்றிய காலத்தில் திருக்குறள், சீவக சிந்தாமணி, நன்னூல் ஆகிய நூல்களைக் கற்றுணர்ந்தார் கால்டுவெல். ‘திருநெல்வேலியின் அரசியல் மற்றும் பொது வரலாறு’ எனும் நூலை எழுதினார்.

கால்டுவெல்லின் பணிகளுள் முதன்மையானதாகப் போற்றப்படுவது, திராவிட மொழிக் குடும்பம் குறித்த ஆய்வுகளே. தென்னிந்திய மொழிக் குடும்பத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குடகு ஆகிய ஆறு மொழிகளைத் திருந்திய மொழிகள் என்றும், இவை திராவிட மொழிக்குடும்பம் என்றும், இவை திராவிட மொழிக் குடும்பம் என்றும், துதம், கோதம், கூ, கோண்ட், பிராகுய் உள்ளிட்ட மொழிகளைத் திருத்தமடையாத மொழிகள் என்றும் வகைப்படுத்தினார். இந்திய மொழிகளில் திராவிட மொழிகள் ஒரு தனிக் குடும்பத்தைச் சார்ந்தவை என்று பல்வேறு சான்றுகளோடு நிறுவினார். ராபர்ட் கால்டுவெல் தனது ஆய்வை 1856ஆம் ஆணடு ‘திராவிட மொழிகளில் ஒப்பிலக்கணம்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

– பொ. அறிவன், கழனிபாக்கம்