‘வீரமாமுனிவர்’ என்று அழைக்கப்படும் கான்ஸ்டான்டைன் ஷோசப் பெஸ்கி

2023 பிப்ரவரி 1-15, 2023 மற்றவர்கள்

இத்தாலி நாட்டில் கேசுதிகிலியோன் எனும் இடத்தில் பிறந்தார்.
பெஸ்கி இத்தாலி நாட்டு கிறித்துவ மத போதகர் ஆவார்.

இவர் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் சிறப்பான பணிகளைச் செய்துள்ளார்.

23 நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார்.

இயேசு கிறித்துவின் வாழ்க்கை தொடர்பான நிகழ்ச்சிகளை விளக்கி, தமிழ்ப் பண்பாட்டுக்கேற்ப “தேம்பாவணி’’ என்னும் பெருங்காப்பியத்தை இயற்றியுள்ளார். இது இவரின் தமிழ் புலமைக்குச் சான்றாக உள்ளது.

சுப்ரதீபக் கவிராயர் மூலம் தமிழில் புலமை பெற்றார்.
இவர் தமிழ்நாடு வந்த பின் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்றுக்கொண்டார்.

இலக்கியச் சுவடிகளைப் பல இடங்களில் சென்று தேடி எடுத்ததால் “சுவடி தேடும் சாமியார்’’ என அழைக்கப்பட்டார்.

தமிழின் சிறப்பை பிற நாட்டவர் கற்க, உணர திருக்குறள், தேவாரம், திருப்புகழ், நன்னூல், ஆத்திசூடி போன்ற நூல்களை பிற அய்ரோப்பிய மொழிகளில் வெளியிட்டார். தமிழ் கற்க ஏதுவாக தமிழ் – லத்தீன் அகராதியை உருவாக்கினார். இதுவே முதல் அகரமுதலி ஆகும்.

சதுரகராதியை, நிகண்டுக்கு ஒரு மாற்றாகக் கொண்டு வந்தார். பல தமிழ் படைப்புகளையும் மருத்துவ நூல்களையும் இயற்றியுள்ளார். இவர் பிப்ரவரி 4, 1747(04.02.1747)இல் இறந்தார். வீரமாமுனிவர் தமிழுக்கும்தமிழ் இலக்கியத்திற்கும் பெரும் பங்காற்றியுள்ளார்.