புதன் கருப்பாக இருக்கக் காரணம் ஏன்?

2022 டிசம்பர் 1-15 2022 மற்றவர்கள்

சூரியக் குடும்பத்தின் முதல் கிரகம் புதனாகும். இது நிலவைப் போல பாறைகளால் ஆனது. சூரிய வெளிச்சத்தை நிலவு பிரதிபலிப்பதைப் போல் புதன் பிரதிபலிப்பதில்லை. இதற்கான காரணத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருந்தபோது, அமெரிக்கா அனுப்பிய மெசஞ்சர் விண்கலம் இதற்கான காரணத்தை நமக்குத் தெரிவித்துள்ளது. பென்சிலில் இருக்கும் கிராஃபைட் போன்ற கார்பன் பொருளால் புதன் போர்த்தப்பட்டுள்ளது. எனவேதான் அது கருப்பு நிறத்தில் காட்சி தருகிறது. ஒரு காலத்தில் புதனின் மேற்பரப்பில் கடல் போல் இருந்த எரிமலைக் குழப்பில் கிராஃபைட் மிதந்து கொண்டிருந்தது. காலபோக்கில் அது அப்படியே குளிர்ந்து அதன் மேற்பரப்பில் படிந்துவிட்டது.
தினந்தந்தி,
சிறுவர் தங்கமலர்
புதன் ஏன் கருப்பாக இருக்கிறது?
(18.11.2022)