கட்டுரை: ஆசிரியர் 90

ஆளூர் ஷாநவாஸ், சட்டமன்ற உறுப்பினர் வி.சி.க. திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு அகவை 90 ஆகிவிட்டது என்பதை எவரும் ஏற்க மாட்டார்கள். ஏனெனில், 90 வயதுக்கு உரிய முதுமையோ, சோர்வோ, நடுக்கமோ அவரிடம் துளியும் இல்லை. துடிப்புடன் இயங்குகிறார். அன்றாடம் எழுதுகிறார்; பேசுகிறார். ஊர் ஊராய் பயணிக்கிறார். சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம் என்றார் அய்யா பெரியார். பெரியாரின் வாக்கையே தன் வாழ்க்கையாகக் கொண்டுள்ள ஆசிரியர் அவர்கள், சலிப்பின்றி, ஓய்வின்றி சுற்றிச் […]

மேலும்....

கவிதை: தொண்ணூறிலும் தொடரும் தொண்டு!

பேராசிரியர் அ. செகதீசன், ஆரியூர் விடுதலையைக் கண்டாலே கடமை உணர்வேறும்! விடுதலையைக் கைப்பிடித்தால் இனமானம் தோன்றும்! விடுதலையைப் படித்தாலோ வரும்பாது காப்பாய் வீறுகொளக் கூடும்! தன் மானமிகும்! சாதி விடுதலைக்கும் வீண்மதத்தின் விடுதலைக்கும், நாட்டு விடுதலைக்கே முன்னாகும் சமுகவிடு தலைக்கே விடுதலையைத் தோற்றுவித்த தந்தை பெரியாரின் ‘விடுதலை’யின் ஆசிரியர் ‘உண்மை’யுடன் வந்தார். தந்தைபெரி யார்இன்றேல் தமிழினமே ஏது?! தன்மான இயக்கம் எனத் தாங்கியதன் மீது விந்தைமிகு மாற்றமெலாம் விரைந்தெடுத்த போது வீரமணி ஆசிரியர் விடுதலையின் பேறு! சந்தையென […]

மேலும்....

கட்டுரை: கொள்கைக் குடும்பத்தின் தத்துவத் தலைவர்!

கோவி.லெனின் திராவிட இயக்க எழுத்தாளர் மாண்புமிகு ஆக வேண்டிய காலம் வரும் போகும். ஆனாலும், மானமிகுவாகத்தான் காலம் முழுவதும் இருக்க வேண்டும். மாண்புமிகு ஆவதும்கூட நம் சமுதாயத்தை மானமிகுந்ததாக ஆக்குவதற்குத்தான் என்பதைத் திராவிட இயக்கத்தினருக்குப் பாடம் நடத்திக் கொண்டே இருக்கும் ஆசிரியருக்கு அகவை 90. ஓர் உயிர், அந்த உயிருக்கு நிகரான ஓர்இயக்கம். அதன் ஒரே கொடி இவைதான் ஆசிரியரின் 80 ஆண்டுகாலப் பொதுவாழ்வின் அடையாளங்கள். பத்து வயதில் பகுத்தறிவு-சுயமரியாதை- சமூகநீதிக் கொள்கையை ஏற்றவர்.தந்தை பெரியாரின் நெறியையும் […]

மேலும்....

எத்தர்களை முறியடிக்கும் எதிர்வினை (112)

ஆரியர்கள் படையெடுத்து வந்தவர்களா..? நேயன் ஆரியர்கள் இந்தியாவின் மீது படை யெடுத்து வந்து, தாசர்களையும், தசியுக்களையும் வெற்றி கொண்டு அவர்கள் மீது தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டினார்கள் என்ற கோட்பாட்டை ஆதரிப்பவர்கள் ரிக் வேதத்திலுள்ள சில செய்யுட் பகுதிகளைக் கணக்கிலெடுத்துக் கொள்ளத் தவறிவிடுகிறார்கள். இந்தச் செய்யுள் பத்திகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்தச் செய்யுள்களைக் கருத்திற் கொள்ளாமல், வெளியிலிருந்து வந்து இந்தியாவின் மீது ஆரியர்கள் படையெடுத்தார்கள், இங்குள்ள ஆரியரல்லாத சுதேச குலமரபுக் குழுக்களை வெற்றி கொண்டார்கள் என்ற கோட்பாட்டை […]

மேலும்....

கட்டுரை: மலைப்பின் மறுபெயர் ஆசிரியர் கி.வீரமணி!

வி.சி. வில்வம் தொழில்நுட்ப அணி அமைப்பாளர், திராவிடர் கழகம். திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு வயது 90 என்கிறார்கள்! முதல் 10 ஆண்டுகள் சிறுவயதில் வீட்டில் இருந்துள்ளார். பிறகு நாட்டிற்கு வந்துவிட்டார்! “தண்ணீரை விட இரத்தம் கெட்டி-யானது; இரத்தச் சொந்தத்தை விட, கொள்கை உறவுகள் மேலானது”, என வாய்ப்புக் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் ஆசிரியர் கூறுவார்கள்! அப்படிச் சொல்வதற்கான அனைத்து நியாயங்களும் தலைவருக்கு உண்டு! காரணம் முன்பு சொன்னது தான், 10 ஆண்டுகள் வீட்டிற்கும், […]

மேலும்....