தமிழர் தலைவருக்கு “மனிதநேய சாதனையாளர்’ விருது

Uncategorized

கனடா மனிதநேயர் (Humanist Canada) அமைப்பு வழங்கியது
சமூகநீதிக்கான பன்னாட்டு மனிதநேய மாநாட்டினை ஏற்பாடு செய்த அமைப்புகளுள் ஒன்றான கனடா (Humanist Canada) மனிதநேயர் அமைப்பு – திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு ‘மனிதநேயர் சாதனையாளர்’ விருதினை வழங்கியது. தமிழர் தலைவரின் மனிதநேய மற்றும் மனித உரிமைக்கான பங்களிப்பை (Life long Contribution) பாராட்டும் விதமாக 2022ஆம் ஆண்டுக்கான “மனித நேயர் சாதனையாளர்’ விருதினை வழங்கிடுவதாகக் குறிப்பிடும் பட்டயம் வழங்கப்பட்டது.
விருதினை கனடா – மனிதநேயர் அமைப்பின் தலைவர் மார்டின் பிரித் வழங்கினார். விருதினை தமிழர் தலைவர் சார்பாக திராவிடர் கழகப் பொருளாளர்
வீ.குமரேசன் நேரில் பெற்றுக் கொண்டார். உடன் மாநாட்டில் பங்கேற்ற கழகப் பொறுப்பாளர்கள் – தோழர்கள் இருந்தனர். மற்றும் பெரியார் பன்னாட்டு மய்யத்தின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன், பொருளாளர் அருள்செல்வி பாலகுரு ஆகியோரும் உடனிருந்து விருதினைப் பெற்றுக் கொண்டனர்.